Wednesday, December 30, 2009

!எங்கோ படித்தது !

இந்தியன்: நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : உனக்கு சுதந்திரம் உண்டு அனால் பேச்சு சுதந்திரம் இல்லை…
தமிழன்: அதனால் என்ன சுதந்திரம் இருக்கிறதே…

இந்தியன் : நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : தமிழில் பேசலாம்.. கேள்வி கேட்ககூடாது….”
தமிழன்: சரி…..

இந்தியன் : நதி உனக்கு, நீர்மட்டும் அவர்களுக்கு…”
தமிழன் : பின் எப்படி நான் பயிர்செய்வது…
இந்தியன் : உன் நல்ல மனதிற்கு கடவுள் மழை தருவார்…
இனி கேள்வி கேட்க்ககூடாது…”
தமிழன் : ஓ… மறந்துபோனேன்..இனி கேட்கமாட்டேன்..

தமிழன் : ஐயோ என் சொந்தங்களை அடிக்கிறார்களாம்
அண்டை மாநிலத்திலே…
இந்தியன் :அடிப்பவனும் உன் சகோதரன் தான்…
தமிழன் : யார் சொன்னது…
இந்தியன் :நீதான் சொன்னாய் இந்தியர்கள் உன் சகோதரர்கள் என்று…
தமிழன் : ஓ…அப்படியானால் சரி…

இந்தியன் : தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்….!
தமிழன்: எங்கே?
இந்தியன் : காஷ்மிரிலே…
நம் மண்ணை கேட்கிரார்கள் மாபாவிகள்..
தரலாமா ஒரு பிடிமண்ணும் மாற்றானுக்கு…
தமிழன் : பின் எதற்கு கொடுத்தீர்கள் கச்சதீவை?
இந்தியன் : ம்ம்… ம்… வாயை மூடடா”…

தமிழன் : மலேசியாவில் அடிக்கிரார்களாம் இந்தியனை…
இலங்கை கடற்படை சுடுகிறது இந்தியனை…
இந்தியன் : யார் சொன்னது அவர்கள் இந்தியனென்று….??
தமிழன் தானே…? ஸூத்திரன்”….

இந்தியன் : சரி சரி வரி கொடு…
தமிழன்: எதற்கு…!!?
இந்தியன் : நீ இந்தியன்..
தமிழன்: யார் சொன்னது..?
இந்தியன் : நான்தான் சொல்லுகிரேன், நீ இந்தியன்”..

இந்தியன் : என்னடா முறைக்கிறாய்…?”
தமிழன்: சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்தாயா..?
இந்தியன் :ஆம் அதற்கென்ன..?
தமிழன் : அவர்கள் என் சொந்தம்…நீ கொடுத்தது என் பணம்..
இந்தியன் : அவர்கள் நம் தலைவனை கொன்றவர்கள்…
தமிழன் : யாரடா தலைவன்? என் தலைவன் பிரபாகரன்…

இந்தியன் : ராஜதந்திரியாரே… இவன் பிரபாகரன் என்றான்..!!!!
ராஜதந்திரி :ஆ… அவன் விழித்துக்கொண்டான்…
அவனை இருட்டறையில் அடையுங்கள்…
அவன் கேள்வி எழுப்புவான்…
மற்றவர் காதில் விழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்…
அவன் தமிழன் எச்சரிக்கை !!!
இந்தியர்களே…. உசார்!”

!!ஜாலி @ சீரியஸ் தமிழன், தலைவர்கள் ,தமிழ்நாடு,இந்தியா தெலுங்கானா ,அறிவியல், தோச கரண்டி ,"லான்ஸ்டாலைட்"..விண்வெளி !!

ஹாய் ! வணக்கங்கள் ...நண்பர்களே..
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!நிறைய பேர்( ரெண்டு பேர்தான் ... :) ) கேட்டாங்க ,"என்ன தமிழன் உங்க தமிழில் கொஞ்சம் வித்தியாசம் தெரியுதே?".. என்று..நான் அவர்கள் எல்லார்க்கும் சுருக்கமா பதில் சொல்லிறேன்..
"சுத்த தமிழ் ,மரபுக் கவிதை (அதுவும் நான் எழுதனது வேற...) கொஞ்சம் போர் அடிக்ற மாதிரி.... எனக்கு தோன்றியது..சோ! கொஞ்சம் ட்ராக் மாறுவோமே ..அப்டின்னு எழுத ஆரம்பிச்ருக்கேன்.ஹ்ம்ம்!..இப்போவாவது வாசகர்கள் கமெண்ட் கொடுக்ராங்க்லானு பாப்போம் ..!!!(யோ !முதல வாசகர்கள் கூடுராங்கலானு பாரு அப்டின்னு நீங்க சொல்றது கேக்குது..கேக்குது ).." சோ ..இந்த மாற்றத்தில் சுயநலம் கலந்திருக்கு..பட் அந்த சுயநலத்திலையும் பொதுநலம் கலந்திருக்கிறதுபா (நன்றி விவேக் சார்... ). ஐயோ... சுருக்கமா பதில் சொல்றேன்னு ரொம்ப பேசிட்டு இருக்கேன் என்று நினைக்கிறேன் ..இதோடு ஆசிரியர் பக்கத்தை முடிச்சுக்றேன் ..
கவர் ஸ்டோரிக்கு போவோமா..?..

எதை பற்றி எழுதுவது என்று யோசிச்சுற்றுகும்பொது..என் நண்பர் சொன்னார் அரசியல் பற்றி எழுதவே மாட்டேன்கறீங்க என்று (நம்மள்ட்ட இருந்து ரொம்ப எதிர் பாக்ராங்களோ?) சோ கொஞ்சம் அரசியல் பேசுவோமே..

முதல நம்ம தலைவர்கள் பற்றி ..

86 வயதான ஒரு மாநிலத்தின் ஆளுநர், ..ஆளுநர் மாளிகையிலேயே பெண்களுடன் _______ _________ _________ (கோடிட்ட இடத்தை நிரப்புக )

இன்னொரு பக்கம் ஈழ போரை நிறுத்த சொல்லி காலை சிற்றுண்டி ..மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில்ல்ல்ல்....கடற்கரையில் ஒருவர் உண்ணா நோன்பு ??(பின் குறிப்பு: குளிர் சாதன பெட்டியுடன் )

இவுங்கதான் தலைவருங்கலாம்பா ....

அரசியல் பேசும்போது தமிழன்...இந்தியன்..பேசாம இருக்க முடியுமா..?

தெலுங்கானா..(இந்தியன் )
ஒருவர் உண்ணாவிரதம் இருக்கிறார் ...
மாநிலத்தை பிரிக்க ஆணையிடுகிறது..மத்தியரசு

தமிழ்நாடு ..(இந்தியன் எனப்படுகிற தமிழன் )
ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற காரனத்திற்காக 18மாவீரர்கள் நெருப்பிற்கு தங்கள் உயிர்களை இரையாக்குகிறார்கள் ...
மத்தியரசு ஒரு வருத்தமோ ..ஒரு கண்டனமோ ..செய்ததாக இதுவரைக்கும் தகவல் இல்லை..

இதுவரை சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்தியன் என்று சொல்லப்படுகின்ற தமிழனின் எண்ணிக்கை 500 தொடுகிறது..
இதற்கு மத்தியரசு செய்தது..உருப்படியாக ஒன்றுமில்லை..அதுவே ஏதேனும் ஒரு மலையாளிக்கு வளைகுடாவில் பிரச்சனையா..?
எத்தனை கண்டனங்கள்.? சரப்ஜித் சிங் தூக்கு தண்டனை குறைக்க சொல்லி எத்தனை வேண்டுகோள்கள்.. தமிழர் உயிர்களில் என்ன வித்தியாசம் கண்டிருக்கின்றனரோ? ஒரு கண்டனம் கிடையாது..தமிழர் குருதியில் ஆராய்ச்சி செய்ய என்னுகிர்ரர்கள்..பதர்கள்..!
ஏன் இந்த வஞ்சனை செய்யப்படுகிறது?..ஏன் இந்த வேற்றுமை காட்டப்படுகிறது ?..
பதில் கட்டாயம் காலம் தான் சொல்ல வேண்டும் .
பதில் என்பது கேள்வி கேட்டால் தானே தரப்படும் ..அத்தகைய கேள்விகளை கேட்கும் அளவிற்கு நம் அரசியல் தலைவர்கள் இல்லை..
தங்கள் மகனை எவ்வாறு மந்திரி ஆக்குவது..என்பதை சிந்திப்பதிலேயே பாதி பேர் தங்கள் சிந்தனையை செலுத்துகிறார்கள்...அவர்களுக்கு எப்படி கேள்விகள் கேட்பதற்கு நேரம் இருக்கும் .இன்னும் சில பேர் இருக்கிறார்கள் எந்த தொந்தரவும் வேண்டாம் என்று எஸ்டேட்டுக்கு சென்று விடுவார்கள்..
சாதிய அரசியலை விடுத்து ..கட்சி வேறுபாடுகள் மறந்து நம் இனத்திற்கு ஒரு நல்ல தலைமை..கேள்விகளை கேட்பதற்கு தேவை..அத்தலைமை வரும் நாள் தமிழர்க்கு திருநாளாகும்..

அடுத்து இடைத்தேர்தல்
இவ்வார்த்தைக்கு தான் எவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறது அநியாயம்,அராஜகம்,கொண்டாட்டம்(வாக்காளர்களுக்குதான்..).
இப்போதெல்லாம் யார் என்ன செய்தார்கள் .யார் நல்லவர்... யார் கேட்டவர் ...என்று வாக்காளர்கள் பார்ப்பதில்லை..யார் அதிகம் கொடுக்கிறார்கள் என்றே பார்க்கின்றனர் ..ஒரு மாத சம்பளத்தை ஒரு ஓட்டிற்கு தந்தால் யார் வேண்டாமென்பார்கள்..முன்பெல்லாம் இலை மறைவு..காய் மறைவாக நடந்தது இப்பொழுது..வெளிப்படையாகவே நடக்கிறது..இதை தேர்தல் ஆணையம்(அப்டினா என்ன ?) வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது வேதனையே..

சரி விடுங்க பாஸ் ...அரசியல் போதும் அறிவியலுக்குள் போவோமே ...

உலகத்திலேயே ரொம்ப ஸ்ட்ராங்கான பொருள் என்ன ? இப்படி ஒரு கேள்வி வந்தா எல்லாரும் பட்டுன்னு பதில் சொல்வீங்க "வைரம் "(கல்யாணம் முடிஞ்ச சில பேர் "தோச கரண்டி"ன்னு கூட சொல்லலாம் பாவம்..அவங்க வலி எனக்கு புரியுது ..)என்று..இனிமேல் அப்படி சொல்ல முடியாதுங்க ஏனா..அதைவிட ஸ்ட்ராங்கான ஒரு பொருளா கண்டுபுடிச்சிட்டாயங்க..அதோட பேரு.. "லான்ஸ்டாலைட்" சோ இனி "லான்ஸ்டாலைட்" என்றே பதில் சொல்லுங்க..மச்சிஸ்..

அடுத்த தகவல்..விண்வெளில உருவாகிக்கொண்டிருக்கிற ஆய்வுக்கூடத்துக்கு புதுசா இப்பொழுது மூணு பேர் போயிருக்றாங்க ..ஏற்கனவே அங்க மூணு மாசம் தங்கிருக்றவங்க..இப்ப ஏக குஷில இருக்கங்க்லாம்பா புது கம்பெனி கிடைக்க போகுதுல அவங்களுக்கு. சோ..மொத்தம் அங்க ஐந்து பேர் இருக்றாங்க இப்ப..
(இவ்ளோதான்யா உலகம்..!)

கொசுறு தகவல் எதோ செவ்வாய் கிரகத்துக்கு டூர் வேற கூட்டிட்டு போகபோரான்கலாம் மொத்தம் ஐந்நூறு நாட்களாம் காசிருக்ரவங்க ரெடி ஆகிக்கோங்கோ.... !

புரியுது...
உங்க நிலைமை எனக்கு புரியுது..
இதுக்கு மேல மொக்கை போட முடியாதுன்னு நினைக்கிறேன்..சோ
இப்ப நிறுத்திக்றேன்..நெக்ஸ்ட் மீட் பண்றேன்..
நான்மிழன்.


(எழுதினது பிடித்ததென்றால் கமெண்டுங்க...பிடிக்க வில்லை என்றாலும் கமெண்டுங்க...
அடுத்த
வருஷம் மீட் பண்ணுவோம் ...நன்றி !)


Sunday, December 27, 2009

!முதல் முயற்சியாக சிறிது நகைச்சுவையோடு எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்..ரசிப்பீர்கள் என்று நினைத்து !

தமிழ் பாடல் என்று தற்சமயம் வரும் பாடல்களில் வரும் வார்த்தைகள் தமிழ் தானா என்று பல சமயம் எனக்கு சந்தேகம் வருவதுண்டு ..சில பாடல்களெல்லாம் ஒரு நாலஞ்சு தடவை கேட்டாதான் அது தமிழ் தாணு தெரியுது..

ஒரு பக்கம் "நாக்க முக்க நாக்க முக்க" என்று எந்த மொழினே தெரியாம கதருறாங்க...இன்னொரு பக்கம் ஆத்திச்சுடி...ஆத்திச்சுடி ...என்று தமிழிலேயே?? வெறி கொண்டு ஆடுறாங்க..இது ரெண்டையும் கேட்டு ..வாண்டுங்க வீட்ல போடற ஆட்டம் ..பெரும் ஆட்டம்...

இதுல என்ன வேடிக்கை என்றால் இது மாதிரி எந்த மொழியும் சாராத ஒரு பாடலை ரசிப்பது பெருமை ,நல்ல கருத்துள்ள பழைய பாடல்களைக் கேட்பதே கேவலம் என்றும் நினைக்கும் நம்ம யூத்ஸ் (நானுந்தாம்பா) நிலை..பரிதாபம்.. நான் புதுமைக்கு எதிரானவன்லாம் கிடையாது பா..ஆனா நம்ம பழைய பாட்டுக்களையும் சிதைக்காம பாதுகாக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்..

சரி விடுங்க பாஸ் ..அறிவுரை ஸ்டைலில் போகுது ...பிறகு ஜனநாயக நாடு ,ரசிப்பு சுதந்திரம் இல்லை என்று யாரவது கமெண்ட்கொடுக்க போறீங்க ...
சாம்பிளுக்கு இந்த பாவேந்தர் பாடல்கள..கேளுங்க மச்சான்களா!...நான் டைலமோ..டைலமோ...கேக்கபோறேன் ஹி....ஹி...

மீண்டும் அடுத்த சந்திப்பில் இன்னும் பேசுவோம்..

நான் தமிழன்..

Thursday, December 17, 2009

!!என்னைக் கவர்ந்த கவிப்பேரரசின் கவிதை..உங்களையும் கவரும்..!!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே...
90 நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்...
800 ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி...

பார்வையிலே சில நிமிடம்...
பயத்தோடு சில நிமிடம்...
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்...
இலக்கணமே பாராமல்...
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த...
மோகத்தில் சில நிமிடம்...

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை ...
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை...
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை...
இருவருமே தொடங்கி விட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை...

அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய் ...

ஆடை களைந்தேன்
வெட்கத்தை நீ அணிந்தாய்...

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும் ...
கடைசியிலே அழுத கண்ணீர் மட்டும் கையில் இன்னும் ஒட்டுதடி ....

Thursday, November 12, 2009

! இந்த வாரம் கொஞ்சம் கிறுக்கலாம் என்று சிந்தித்தபோது என் மதியில் உதித்தது...மழை, மேகம், பூமி வெப்பமயமாதல் ..எல்லாம் இணைத்திருக்கிறேன் ஓர் கவிதையில் !


பெண்மேகம் அழுதாள்....
மனமுருகி...
நம் மக்கள் நிலைகண்டு
மழைத்துளியாய்.....
துடைத்தாள் பலர் கண்ணீரை....
தன் விழி மழை நீரால்....
என் அன்பு பெண் மேகம்...

நன்றி மறப்பது மனிதர் இயல்பு என
வெகு தெளிவாய் எடுத்துரைக்க...
எங்கள் கண்ணீர் துடைத்த...
கொடைப் பெருந்தேவியே...
உன்னை உருக்குலைக்க...
கரியமில வாயு என்றரக்கனை...
ஏவிவிட்டோம்...
உன் கோபக் கனலில் சிக்கிவிட்டோம்...



உன் விழி மழை நீராலேயே...
எங்களை தண்டிக்க என்னிவிட்டயோ...
வீசுகிறாய் பெரும்புயலாய்
என் தமிழ்நாட்டில்....
உன் கோபம் தாங்க
சக்தி இல்லை எம்மவர்க்கு...
மடிகிறார் உந்தன்
கோபக் கொலைப் பார்வையில்....
யாம் செய்த தவறு மறந்து...
தாயே உந்தன் கொலை பார்வை நீக்கி..
உந்தன் கொடைப் பார்வை வேண்டுகிறேன்...
நல்குவாயாக...

-நான் தமிழன்

Sunday, November 1, 2009

!!! நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிப்பு ..வாரம் ஒரு முறையாவது இனி வலையை புதுப்பிக்க முயல்வேன் !!


என் தனிமையின் அவதாரங்கள்


"தனிமை - கசப்பு "
தனிமை கிடைத்தும்
உன்னோடு ஓர் வார்த்தை பேசாது
நான் ஊமை யாகி போன அச்சமயம்
கசந்தது தனிமை
"தனிமை-கசப்பு"


"தனிமை-இனிமை "
வெகுதொலைவு உன்னைவிட்டு
நான் வந்துவிட
இங்கேயும் அதே "தனிமை" கிடைக்கிறது
உன் நிழற்படத்துடன்...
நிறுத்தாது பேசுகிறேன்...
இனிக்கிறது தனிமை
"தனிமை -இனிமை"


"தனிமை -கொடுமை "
வெற்றறையில் உட்க்கார்ந்து
வாய் மணக்க அழகு தமிழ்
பேச ஆளின்றி
என் குடும்பத்தின் நினைப்பு தொற்றி..
வழியும் விழி நீர் துடைக்கிறேன்..
கொடுமை செய்கிறது தனிமை..
"தனிமை - கொடுமை "


"தனிமை - என் ஆசான் "
வாரம் ஓர் முறையாவது
என்னைக் கிறுக்க வைக்கிறார்..
உங்களை (என் கவிதைகளை வாசிப்போர் ?)
சிரமத்திற்குள்ளாக்குவதில் என்ன மகிழ்ச்சியோ
என் தனிமைக்கு ஞானறியேன்...!!

என் தனிமை தசாவதாரம்
எடுக்க இன்னும் சில காலம் எடுக்கும்
என நினைக்கிறேன்...

-நான் தமிழன்


Wednesday, September 30, 2009

!!!என்னைக் கவர்ந்த ஒரு ஈழத்துக் கவிதை..."கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திலிருந்து!!!


எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன...
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன...
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன...
எங்கள் பற்கள் கண்டிப்போய் உள்ளன...
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்...
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக...
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக...
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக...
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக...
எங்களை முதுகில் கசையால் அடிக்குக...
எங்கள் முதுகு தொர்பில் துளர்ந்து போகட்டும்..




.......தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும்..
கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும்...
இறுகிய உதடுகள் ஒரு நாள் துடிதுடிக்கும்...
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்...
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக...
அது வரை உங்கள் வல்லம் ஓங்குக...

Monday, September 14, 2009

!!என் பள்ளிக்காலத்தில் படிக்க வேண்டுமே என்று கஷ்டப்பட்டு வேண்டா வெறுப்பாய் படித்த செய்யுள் இப்பொழுதுதான் இச்செய்யுளின் சுவையை உணர்கிறேன்!!


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பணியைப் போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

-மகாகவி சுப்ரமணிய பாரதி

Wednesday, September 9, 2009

!!இதோ இந்த வார கிறுக்கல் உங்களுக்காக!!.............................நிழற்படம்........................


"என்னவள்" நிழற்படம கிட்ட வேண்டி
நெடுநாளாய் தவமிருந்தேன் ....
அவ்வரம் கிடைக்க வேண்டி...
அனுதினமும் காத்திருந்தேன் ...
ஆத்திகனாவும் மாறிவிட்டேன்...


கிட்டிவிட்ட இத்திருநாளே...
என் வாழ்வின் பெருநாளாம் .


கண்டிருந்தால் கட்டியனைத்து...
நன்றி! கூறியிருப்பேன்...
நான் கேட்ட வரம் ஈன்றதினால் (இறைவனை)

ஆனால்......
கண்டதில்லை கண்கள் கொண்டு...
இன்று வரை இறைவனை ...

"என் செய" என எண்ணியவாறு...
படுத்தபடி பார்த்திருந்தேன்
விட்டத்தை வெறித்தவாறு ...
"பளிச் "சென்று மின்னலொன்று
அச்சமயம் என் மதியில் பாய ..
பட்டென்று வெகுண்டெழுந்தேன்...
பட்டாசை பாயிலிருந்து...

அவசரமாய் அருகிலிருந்த
அலமாரி கதவு திறந்து...
மிக அழகாய் "என்னவள்" வீற்றிருக்கும்..
"அவள்" திருவுருவநிழற்படம் எடுத்து .....
நன்றி கூறினேன்...
கட்டியணைத்தேன்...
இன்பம் கண்டேன்...

இறைவனையே கண்டுவிட்டேன்...
என்ற இறுமாப்பில் ...
துயில் கொள்ள சென்று விட்டேன்...

-- அவள் பித்தன் (நான் தமிழன் )

Tuesday, September 8, 2009

!!முள்வேலிக்குள் முடங்கிப் போய் இருக்கும் நம் தமிழ் உறவுகளுக்காக என் மதியில் தோன்றியது !!


கையருந்து..... காலருந்து....

காலைக் கடனையும்..

ஒரு வேளை உணவையும்...

ஓரிடத்தில் முடித்துவிட்டு ...

ஒட்டிய கன்னத்தோடு ...

ஓடி வரும் கண்ணீர் துடைத்து...

கேட்பாரின்றி அநாதையாய்...

கொடுங்கோலன் ஆட்சியிலே ....

கொடுமை பல அனுபவிக்கும் ....

நம் தமிழ் மக்களின் நிலை கண்டு...

சுய நினைவோடு"சிந்தியுங்கள் "...

என்னருமை தமிழர்களே !...

முள் வெளிக்குள்....

மூனரை லட்சம் உயிர்கள்...

அவ்வுயிர்கள்...

வயிர் நிறைய "இல்லை" உணவு

கொடுத்தனுப்பிய உணவுகளையும்

கொட்டிகொடுத்த பொருட்களையும்

கெட்டுப்போக விட்டுவிட்டு

"!சாகட்டும் தமிழினம் பிணியினிலே!",

என்று கனைக்கிறது...

கழுத்தைக் கூட்டம் தீவினிலே !

இக்கொடுமைகள் களைய

"ஜாதி", "மதம்" மறந்து...

"இனம்", "மொழி" ஒன்றே....

என்பதை நினைவு கூர்ந்து...

முள்வேலிக்குள் முடங்கி இருக்கும்

நம் தமிழ் மக்களினை வெளிக்கொணர ...

முயற்சி செய்வோம் !

நம் உரிமைகளை மீட்டெடுப்போம் !

வாருங்கள்.. தமிழர்களே...!

வாருங்கள்....!

இப்படிக்கு ,

நான் தமிழன் .

Wednesday, August 26, 2009

!!மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரையும் பொங்கி எழ செய்யும் இக்காட்சி ..

குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.

http://www.channel4.com/news/articles/world/asia_pacific/is+this+evidence+of+sri+lankan+aposwar+crimesapos/3321087

இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.



கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே.








!!இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.??!!






தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.






ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.



எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.
தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.

Tuesday, August 25, 2009

நான் படித்து,பார்த்து,கேட்டு ரசித்த ஒரு சினிமா பாடல் !!படம்: முதலாளி

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு
நீயேஅன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!


தென்னை மரச் சோலையிலே
சிட்டு போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

- கவி கா.மு.ஷெரீப்

Friday, August 21, 2009

!!!இதோ இந்த வார கிறுக்கல்!!!


நான் தொலைநோக்கன் !
நீ தொலைநோக்கியாய் இருப்பாய்
என்பதை ஞான் அறிவேன்...
நம் எதிர்காலத்தை தொலைநோக்க
இந்நிகழ்காலத்தில் முயல்வோமே!
என்னுயிர் தொலைநோக்கியே !!

அழகாய் வீடு
அருகே தோட்டம்
மிக அருகே மிக அழகாய் நீ !!
அந்நகர நரக வாழ்க்கை !
உன்னால் நகர சொர்க்கமாகுமே !!

ஒவ்வொரு வெள்ளியும் "நிலாச்சோறு "
உண்டு ," மறவாதே! " , வெண்மதியே !
முதல் வெள்ளியன்று உன்
செவியில் மிக மெலிதாய் சொல்வேன்
கவிப்பேரரசின் கவிதை வரிக் கவர்ந்து

"!உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே! "
அந்நிசியில் உன் வெட்கம் காண
வேண்டுமே கண்கள் கோடி !

"திகட்டுகிறது" என்றெண்ணம்
என் மதியில் "உதிக்கிறது "!
தற்சமயம் இத்தொலைநோக்கு ...
மிக அதிகம்
என நினைப்போர் நிலை அறிந்து
இத்தோடு முடிக்கிறேன்
மிச்சத்தை நேரிலே சேர்ந்தே
நோக்குவோம் ...
என்னுயிர் தொலைநோக்கியே!!
இப்படிக்கு,
தொலைநோக்கன் (நான் தமிழன்).

Sunday, August 16, 2009

!!நான் படித்ததில் பிடித்தது !! "பாரதியார் கவிதை"

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?


நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே
இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை
மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

Saturday, August 15, 2009

!!கட்டுரையும் கூட எழுதுவேன் நான்!! நம் சுதந்திரம் பற்றி ஒன்று!!

நண்பர்களே!
இன்று அறுபத்தி மூன்றாம் ஆண்டு சுதந்திர தினம் ,அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . தோழர்களே ! உங்களுடன் இந்நாளில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பழம்பெருமை பேசி, எவ்வாறு சுதந்திரம் பெற்றோம்? எப்படி பெற்றோம்? என்பதில் காலத்தை வீண் அடிப்பதில் எனக்கு விருப்பமில்லை என் மனதில் பட்டதை நான் இங்கு கூறுகிறேன் ...

யாருக்கு இங்கு சுதந்திரம்?

எங்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று கூறி ஊட்டியில் ஒய்யாரமாக ஒரு பங்களா , கோடைக்காக கொடைக்கானலில் ஒரு வீடு ,ஆசைக்காக ஆந்திராவில் ஒரு தோட்டம் என்று சுதந்திரமாக வாங்கி குவிக்கிறார்களே சில மாண்புமிகு அரசியல்வாதிகள் !!

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ?

நாங்களும் இந்நாட்டின் குடிமகன்களே என்று சொல்லி நாங்களும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று என் மாணவன் மற்றும் பெற்றோரின் உதிரத்தையே உணவாய்க் கொண்டு உயிர் வாழ்கின்றனவே அட்டைப் பூச்சி கல்லூரிகள்

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ?

இல்லை ...
சில நவ நாகரிக மங்கைகள் இதுதான் சுதந்திரம் என்று தங்கள் ஆடைகளிலேயே தெரிவித்து "பாரதி கண்ட புதுமைப்பெண்கள்" நாங்கள் என்று நினைத்து நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்களே !!

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ ?

"இந்நாட்டில் கூலிக்காரன் மகன்
அவனது கனவுகளை மனதில் புதைத்து கூலிக்காரனாகவே பட்டாசுத்தொழிற்சாலையில் அவனது கனவுகளோடு சேர்ந்து சாம்பல் ஆகிறான்."

"சீமான் மகனோ
அவன் கனவுகளை அடைய விமானத்தில் ஏறி பறக்கிறான் "
ஏன் இந்த வேற்றுமை ?"கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்"என்பான் ஆத்திகன் .
நாத்திகன் என்ன சொல்ல ?"விடை தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும் ."

நம் மாணவன் எத்தனை பேர் தான் நினைத்த படிப்பைப் படிக்கிறான் தன் கனவை அடைகிறான் ? பதில் : மிக சொற்பம் !
தற்பொழுது "கல்வி" என்பது"வியாபாரம்". கல்விக்கு நன்கொடை கொடுத்தே தேய்கிறார் என் தமிழ் பெற்றோர் !!

"முன்னேற்றம் இல்லை " என்பது என் வாதமன்று குறை கூறுவதே என் பிழைப்பன்று !!

"சந்திராயனை " சந்திரனுக்கு அனுப்பிவிட்டோம் பெருமை கொள்கிறேன்! முன்னேற்றமே !

அதே சமயம் " என் விவசாயிகளை " தஞ்சையில் கஞ்சிதொட்டியில் கஞ்சி குடிக்க வைத்திருக்கிறோமே ! வெட்கப்படுகிறேன்! .

காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போகிறோம் பெருமைப்படுகிறேன் !

அதே சமயம்"காமன்வெல்த் " என்றால் என்ன என்றே தெரியாமல் கல்வியறிவில்லா குருடர்களாய் இருக்கிறார்களே பல கோடி பேர்
வெட்கப்படுகிறேன் இவர்களை கவனிக்க வேண்டாமா ? கல்வி புகட்ட வேண்டாமா?


தோழர்களே சிந்தியுங்கள் ...இவ்வெல்லா அசுத்தங்களையும் கலைந்து நம் நாட்டை பிரகாசிக்க வைப்பது நமது கைகளில் தான் இருக்கிறது .

"நான்","நீ" என்று சிந்திப்பதை விடுத்து "நாம்" என்று சிந்திப்போம் தோழர்களே !

நாம்"காந்திமகானாக" வாழ வேண்டாம் மனிதனாகவாவது வாழ்வோமே !

பொதுவுடமை பற்றி சிந்தியுங்கள் தோழர்களே !

நம் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்வதை பற்றி சிந்தியுங்கள் தோழர்களே !

இவ்வசுத்தங்கள் எல்லாம் கலைந்து நம் நாடு நாடு ஒளிரும் நாள் வெகு தொலைவில் இல்லை ..
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும் " என்ற சொல்லை மனதில் கொண்டு
நம் நாட்டை உயர்த்துவோம் நாமும் உயருவோம் ".

இப்படிக்கு,
நான் தமிழன் .



Wednesday, August 12, 2009

!நாளிதழ் ஒன்றில் புகைப்படத்திற்கு கவிதை கேட்டிருந்தார்கள் அதற்கு நான் எழுதி அனுப்பியது..அவர்கள் பிரசூரிக்கிறார்களோ இல்லையோ! நான் பிரசூரித்துவிட்டேன்!


1"தோல் நிறத்தில் வேண்டாம் பேதம்"

என்று எங்களுக்கெடுத்துரைக்க

கருநாய் தோள் மீது

கை போட்டு நடக்கிறாயோ?

என் அருமை வெண்மாருதியே...


Monday, August 3, 2009

!!நான் பித்தம் கொண்ட ஒருத்தீயை பற்றி !!


உன்னோடு நான் பேசிய
சில நிமிடம்
என் வாழ்வின் "பொன்நேரம்" அது
இல்லை !!
அன்பே!!
"பிளாட்டின நேரம்" என்பேன்....

உனை நான் காண்பது ....
பல வருடங்களில் ....
சில நிமிடங்களே....
அத்தருணம் வேண்டி...
அன்பே!!
என் கண்களும் இருக்கின்றன....
பல வருட தவம்.

அன்பே!!
"நீ அழகு"
உன் கன்னக் குழிகள்...
"மிக அழகு"

பகல் வானிலும் ஒரு கார் நிலவோ?
அன்பே!!
உன் கன்னத்து மச்சம்.
அழகு..


இரவின் முழு நிலவோ?
அன்பே!!
இருட்டினில் உன் முகம்...
அழகு...

வார்த்தைகளும் வர மறுக்கிறது ....
என் மூளையிலும் வறட்சியோ??...
அன்பே!!
உன்னைக் காண வில்லை என்பதால்...

அன்பே!!
மீண்டும் அப்பிலாட்டின நேரத்தை
எதிர்பார்த்து....

உன் பித்தன்....

Thursday, July 30, 2009

!!!கவிதை அல்ல கிறுக்கல்...... என் கிறுக்கல்!!!

எங்கிருந்து வந்தாயடி ??
பெண்ணே!!
என் இதயத்தில் குடி கொள்ள...

எங்கிருந்து வந்தாயடி ??
கண்ணே!!
உன் சிரிப்பில் என்னைக்கொல்ல..

பெரும்புலவன் இல்லையடி நான்
பெண்ணே!!உன் அழகை வர்ணிக்க
இருப்பினும் முயல்கிறேன்
சிறு புலவன் என்றெண்ணி .....

பூக்களுமே நானுமடி பெண் பூவே..
உன் புன்முறுவல் கண்டிருந்தால் ...

கருப்பழகு என்றென்னும் காக்கைகளும்
தலை கவிழுமடி, பெண்ணே!! உன் கருங்கூந்தல் கண்டிருந்தால் ...

சந்திரனும் தலை கவிழ்வானடி,
பெண்ணே!! உன் வெண்முகம் கண்டிருந்தால் ...

எங்கிருந்து வந்தாயடி ??
பெண்ணே
என்னைக் கிறுக்க (கிறுக்கு பிடிக்க) வைக்க ...
பெண்ணே!!
எங்கிருந்து வந்தாயடி ??

Friday, July 24, 2009

!!!என் அம்மாவை பற்றி.....நான்கு வரிகள்!!!

"பாசம்" இம்மூன்றெழுத்தின்

புது விளக்கம் கண்டேன்

மூன்றெழுத்தே உன்னிடம் ,

"அம்மா" என் "பாச அம்மா "

Tuesday, July 21, 2009

தொடர்கவிதைகள் இருந்தால் அலுப்பு தட்டும் என்றெண்ணினேன் அதனால் மாறுதலுக்காக.நான் இணையத்தில் படித்து சிரித்தவை.சிரிக்க தெரிந்தவர்கள்! படித்து சிரிக்கலாம்

விளையாட்டுப் போட்டிகளுக்கு வர்ணனையாளர்கள் இன்றியமையாதவர்கள். ஆனா சில சமயங்களில் அவர்கள் அடிக்கும் கூத்துகள் வடிவேலுவையே மிஞ்சிவிடும்.. அவற்றுள் சில..

1) 1976 ; மாண்ட்ரீல் ஒலிம்பிக்ஸ். 800 மீ ஓட்டம் / வர்ணனையாளர் ; டேவிட் கோல்மன்.இவ்வளவு விரைவாக எவரும் இதுவரை ஓடியதில்லை ; எனினும் உலக சாதனை அளவுக்கு இல்லை..!

2) ஸ்னூக்கர் போட்டி / டெட் லோவ்.ஸ்டீவ் ரோஸ் நிறப் பந்துக்கு குறிவைக்கிறார். ஒருவேளை உங்களது டி.வி. கருப்பு வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு அடையாளம் சொல்கிறேன்.. பச்சைக்கு பக்கத்தில் இருப்பதுதான் ரோஸ் பந்து..!

3) மைக் கிரேட்டன் என்பார் ஒரு வீரரைப் பற்றி சொன்னது..ஜான் அமெரிக்காவில் பிறந்தவர்; என்றாலும் தாய்நாடான ஜப்பானுக்கு வந்துவிட்டார்.

4) 5000 மீ ஒட்டப் பந்தயம். / நம்ம டேவிட் கோல்மன்.அட்டகாசமான ஓட்டம்.. 14:58.89. என்ற நேரத்தில் ஓடிவந்து கிரிஸ்டியான்சன், ஒரு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல நண்பர்களே.. அவர் இதுவரை ஓடியதிலேயே விரைவான நேரமும் இதுதான்.. ( பெர்சனல் பெஸ்ட்).

5) கோல்மன் தான்..இன்று அவர் 31 வயதைத் தொடுகிறார்.. சென்ற ஆண்டு இதே போட்டியில் விளையாடும்போது அவருக்கு வயது 30தான்..!

6) நீச்சல் போட்டி ./ அனிதா லான்ஸ்பரோ.அமெரிக்க 'மண்ணில்' தங்கள் திறமையைக் காட்ட ரஷ்ய 'நீச்சல்' வீரர்கள் முயற்சி செய்வது பாராட்டத்தக்கதே..!

Monday, July 20, 2009

!!ஒரு காதல் கடிதம்!! என்னவளுக்காக..... மட்டும் ......


"அழகு" இம்மூன்றழுத்த்தின் இலக்கணம் நீ .....
உன் அழகை வியந்து இறைவனே வைத்திருக்கிறானோ ???
திருஷ்டி பொட்டு அழகாய் உன் கன்னத்தில் மச்சமாய் !!!

கார் கூந்தல் இடை தொட அரிசி சடையிட்டு
அன்ன நடைபோட்டு ஓரப்பார்வை வீசினாய்
அன்றே தொலைத்துவிட்டேன் இதயத்தை உன்னிடம் !!

உன்னிடம் பேசவில்லை அன்பே பல நாளாய்
உன் குரல் இன்றும் கேட்கிறது
என்னுள்ளே இன்னிசையாய் ....
உனக்கல்லவா தரவேண்டும் "ஆஸ்கார் "

விட்டுவிடு..... அன்பே ,நான் தருகிறேன்.....
என் பெயரை உன் பெயருக்கு பின் சேர்க்க அனுமதி
மறுத்துவிடாதே ......
சிதைத்துவிடாதே என் இதயக் கோட்டையை
ஏற்றுக்கொள் கண்மணியே....
மறுக்காது .....

Wednesday, July 15, 2009

!!ரொம்பவே கம்யூனிசம்!!!

கூர்வாள் கொண்டு கூரிட வேண்டும் வா தோழா!!
கூட்டம் சேர்ந்து கொள்ளைகள் பல அடிக்கும்!!
சில கொடுரர்களை கூர்வாள் கொண்டு கூரிட வேண்டும் வா தோழா!!

பணி செய்ய பணங்கள் (லஞ்சம்) பல கேட்கும் சில பன்றிகளை
பந்தாட வேண்டும் வா தோழா!!
கதர் கட்டிக் கபடங்கள் பல செய்யும்
சிலக் காட்டேரிகளை களை எடுக்க வேண்டும் வா தோழா!!

அதிகாரத்தில் இருந்து அட்டூழியம் பல செய்யும் சிலஅரைவேக்காடுகளை அடியோடு அழிக்க வேண்டும் வா தோழா!!

பிரமுகர்களின் பினாமிகளாய் இருந்து பிரச்சனைகள் பல செய்யும் சில பரதேசிகளை பிடரிமயிர் பிடித்து வெளிக்கொணர வேண்டும் வா தோழா
இக்களைப்(புடுங்கும்) பனி செய்ய சில நூறு கைகள் போதாது
வேண்டுவது பல கோடி கைகள்.....

பல கோடி கைகளை எதிர்பார்த்து,
உங்களுள் ஒருவன் ..

Tuesday, July 14, 2009

!!எனக்கு சில சமயம் கிறுக்கத் தோன்றும் அப்பொழுது ஏதோ கிறுக்கியது!!!

ஏன் படைத்தாய் என்னை ?உண்ண உணவில்லை... உடுத்த உடையில்லை...இருக்க இடமில்லை... என்னவென்று கேட்க நாதியுமில்லை... இறைவா ஏன் படைத்தாய் என்னை ??


பரட்டைத்தலை, சிறுத்த உடம்பு ஈக்கள் மொய்க்க தெருவோரம் வெற்றுடம்புடன் கிடக்கிறேன் அநாதையாய் நான் உங்கள் மொழியில் என் பெயர் "பிச்சைக்காரன்"


"அரிசிச்சோறு", பார்க்கவில்லை பலநாளாய் நின்று கொண்டிருக்கிறேன் நாயுடன் போட்டிபோட்டு குப்பைத்தொட்டியினருகில், இன்று


அஹா!! இன்று என் பல நாள் கனவு ஈடேறும் நாள் கல்யாண சாப்பாடு இன்று


நான் பிச்சைக்காரன் காரணம் இரண்டே எழுத்து

"பசி"!"பசி"!"பசி"!


என் "உயிர்" என்னும் "மூன்றெழுத்தை" சாப்பிட்டிருக்கும்..."இவ்விரண்டழுத்து" நான் பாத்திரம் கையில் ஏந்தவில்லை என்றால்
ஏநதிவிட்டேன் கையில் கீழே வைக்க முடிய வில்லை இன்றுவரை

ஏங்குகிறேன் இறைவா!

எனக்கு மாளிகை வேண்டாம் குடிசையில் சுகமாய் வாழ்வேன் அறுசுவை உணவு வேண்டாம் மூவேளை கஞ்சி போதும் உயிர் வாழ
நான் பட்டாடை கேட்க்கவில்லை மானம் மறைக்க துணி கேட்கிறேன் உனக்கு மானமே இல்லையே!! என்று துணி கூட கொடுக்க மறுக்கிறாயே ??கேட்டதெல்லாம் கொடுக்காது உன்னிடம் கேட்காத அடி உதைகளை மட்டுமே தருகிறாயே??


இறைவா!! உன் காதுகளுக்கு "நல்ல மருத்துவம்"தேவை, இப்பொழுது ஒன்றே ஒன்று கேட்கிறேன்

தவறாது தயவுகூர்ந்து என் ஆசையை நிறைவேற்று என் உயிரை எடுத்துச்செல் தயவுகூர்ந்து எடுத்துக்கொள் நிறைவேற்றுவாய் என்ற எதிர்பார்ப்புடன்
--பிச்சைக்காரன்

Monday, July 13, 2009

!!!எம் மக்களுக்கேதிராய் இம்மான்புமிகு உலகத்தால் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலை சம்பந்தமாக அச்சமயத்தில் எனக்குத்தோன்றியவை!!!

என்று தீருமடா உன் பசி ??
என்று தீருமடா உன் பசி ??
சொல்ல வேண்டும் நிச்சயம் !!
மகிந்தா என்று தீருமடா உன் பசி??

கிழவன் கிழவி
ஆத்தாள் அப்பன்
சிறுவன் சிறுமி
குறைவின்றி கொல்கிறாய்
இன்னும் அடங்க வில்லையா உன் வெறி ??
சொல்ல வேண்டும் நிச்சயம் மகிந்தா என்று தீருமடா உன் பசி??

ஓ!! தமிழர் குருதியின் நிறத்தில்
சந்தேகமோ உனக்கு??
துளைத்துப் பார்க்கிறாய்
கொத்துக் குண்டுகளால்!!
சொல்ல வேண்டும் நிச்சயம்!!
மகிந்தா என்று தீருமடா உன் பசி ??

குருதிக் கடலில் மூழ்குகின்றனர்
என்னுயிர்கள் வன்னியில் !!!
மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறாய்
நீ கொழும்பில்
என்னடா நியாயம் ??
சொல்ல வேண்டும் நிச்சயம்
மகிந்தா என்று தீருமடா உன் பசி??


!!இரத்தம் இரத்தம்!!
இரத்தம்!! இரத்தம்!!
ஐயகோ!! இரத்தம் !!
கதறுகிறாள் என் சகோதரி
பிணக்குவியலின் நடுவே
தன் உயிரற்ற மகனின்
சடலத்தைக் கையிலேந்தி
இறைவா மன்னித்துவிடு
நான் இன்று முதல் நாத்திகன்!!

Friday, July 10, 2009

ஒரு வார்த்தை

பெண்ணே !!
ஒரு வார்த்தை,
ஒரே வார்த்தை,
ஹலோ! போதும்,
என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடும்.

Thursday, July 9, 2009

!!!கொடுமை!!!

"முதுமை" "தனிமை" இவ்விரெண்டு
மூன்றெழுத்துக்களும் தெரிகிறது
உன்னிரெண்டு கண்களில் தெளிவாக அம்மா!!

"பிள்ளை இருந்தும் மலடியடா",
என்று சொல்கிறாயோ அம்மா!!
உன் ஏக்கப்பார்வையால்???

முதுமையில் முக்கால் பெறுவார்கள் இயற்கை
உனக்கும் பொருந்துகிறதோ??
அம்மா!!

நிற்கிறாய் துடைப்பம் என்ற
மூன்றாவது காலோடு
தரையைத் துடைத்தவாறு...

ஒரு காதல் கடிதம்

என்னுயிரே..என் காதலியே..
இன்றும் வாழ்கிறேன்
உன் நினைவால் பிணமாக...

கண்ணே!! எத்தனை மாற்றங்கள் ??
இப்பொழுது என் தலைமுடியின் நிறம் வெள்ளை
ஆனால் உன் நினைவுகள் இன்றும் வாழ்கிறது என்னுள்ளே அதே பசுமை மாறாது

காலம், இல்லை, அரக்கன்!!
அன்பே!! உன்னை என்னிடமிருந்து பிரித்து விட்டான்
உன் நினைவுகளை பிரிப்பதில் தோல்வியுற்றான்
வெற்றிக் களிப்பில் இன்றும் சிரிக்கிறேன் நான் ஏளனத்தோடு அவனைக்கண்டு...

என்னுயிரை மாய்க்கவில்லை நான் அன்பே!
என்னுள் வாழும் உன்னைக் கொல்லத்
திராணியில்லை எனக்கு!!

ஆருயிரே நீ இவ்வுலகை விட்டு மறைந்திருக்கலாம்
வாழ்கிறாய் என் இதயத்தில் இன்றும்
வாழ்வாய் என்னுயிர் பிரியும் வரை....

இப்படிக்கு,
ஆருயிர்க்காதலன்