Saturday, August 15, 2009

!!கட்டுரையும் கூட எழுதுவேன் நான்!! நம் சுதந்திரம் பற்றி ஒன்று!!

நண்பர்களே!
இன்று அறுபத்தி மூன்றாம் ஆண்டு சுதந்திர தினம் ,அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . தோழர்களே ! உங்களுடன் இந்நாளில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பழம்பெருமை பேசி, எவ்வாறு சுதந்திரம் பெற்றோம்? எப்படி பெற்றோம்? என்பதில் காலத்தை வீண் அடிப்பதில் எனக்கு விருப்பமில்லை என் மனதில் பட்டதை நான் இங்கு கூறுகிறேன் ...

யாருக்கு இங்கு சுதந்திரம்?

எங்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று கூறி ஊட்டியில் ஒய்யாரமாக ஒரு பங்களா , கோடைக்காக கொடைக்கானலில் ஒரு வீடு ,ஆசைக்காக ஆந்திராவில் ஒரு தோட்டம் என்று சுதந்திரமாக வாங்கி குவிக்கிறார்களே சில மாண்புமிகு அரசியல்வாதிகள் !!

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ?

நாங்களும் இந்நாட்டின் குடிமகன்களே என்று சொல்லி நாங்களும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று என் மாணவன் மற்றும் பெற்றோரின் உதிரத்தையே உணவாய்க் கொண்டு உயிர் வாழ்கின்றனவே அட்டைப் பூச்சி கல்லூரிகள்

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ?

இல்லை ...
சில நவ நாகரிக மங்கைகள் இதுதான் சுதந்திரம் என்று தங்கள் ஆடைகளிலேயே தெரிவித்து "பாரதி கண்ட புதுமைப்பெண்கள்" நாங்கள் என்று நினைத்து நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்களே !!

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ ?

"இந்நாட்டில் கூலிக்காரன் மகன்
அவனது கனவுகளை மனதில் புதைத்து கூலிக்காரனாகவே பட்டாசுத்தொழிற்சாலையில் அவனது கனவுகளோடு சேர்ந்து சாம்பல் ஆகிறான்."

"சீமான் மகனோ
அவன் கனவுகளை அடைய விமானத்தில் ஏறி பறக்கிறான் "
ஏன் இந்த வேற்றுமை ?"கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்"என்பான் ஆத்திகன் .
நாத்திகன் என்ன சொல்ல ?"விடை தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும் ."

நம் மாணவன் எத்தனை பேர் தான் நினைத்த படிப்பைப் படிக்கிறான் தன் கனவை அடைகிறான் ? பதில் : மிக சொற்பம் !
தற்பொழுது "கல்வி" என்பது"வியாபாரம்". கல்விக்கு நன்கொடை கொடுத்தே தேய்கிறார் என் தமிழ் பெற்றோர் !!

"முன்னேற்றம் இல்லை " என்பது என் வாதமன்று குறை கூறுவதே என் பிழைப்பன்று !!

"சந்திராயனை " சந்திரனுக்கு அனுப்பிவிட்டோம் பெருமை கொள்கிறேன்! முன்னேற்றமே !

அதே சமயம் " என் விவசாயிகளை " தஞ்சையில் கஞ்சிதொட்டியில் கஞ்சி குடிக்க வைத்திருக்கிறோமே ! வெட்கப்படுகிறேன்! .

காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போகிறோம் பெருமைப்படுகிறேன் !

அதே சமயம்"காமன்வெல்த் " என்றால் என்ன என்றே தெரியாமல் கல்வியறிவில்லா குருடர்களாய் இருக்கிறார்களே பல கோடி பேர்
வெட்கப்படுகிறேன் இவர்களை கவனிக்க வேண்டாமா ? கல்வி புகட்ட வேண்டாமா?


தோழர்களே சிந்தியுங்கள் ...இவ்வெல்லா அசுத்தங்களையும் கலைந்து நம் நாட்டை பிரகாசிக்க வைப்பது நமது கைகளில் தான் இருக்கிறது .

"நான்","நீ" என்று சிந்திப்பதை விடுத்து "நாம்" என்று சிந்திப்போம் தோழர்களே !

நாம்"காந்திமகானாக" வாழ வேண்டாம் மனிதனாகவாவது வாழ்வோமே !

பொதுவுடமை பற்றி சிந்தியுங்கள் தோழர்களே !

நம் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்வதை பற்றி சிந்தியுங்கள் தோழர்களே !

இவ்வசுத்தங்கள் எல்லாம் கலைந்து நம் நாடு நாடு ஒளிரும் நாள் வெகு தொலைவில் இல்லை ..
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும் " என்ற சொல்லை மனதில் கொண்டு
நம் நாட்டை உயர்த்துவோம் நாமும் உயருவோம் ".

இப்படிக்கு,
நான் தமிழன் .



2 comments: