Thursday, July 30, 2009

!!!கவிதை அல்ல கிறுக்கல்...... என் கிறுக்கல்!!!

எங்கிருந்து வந்தாயடி ??
பெண்ணே!!
என் இதயத்தில் குடி கொள்ள...

எங்கிருந்து வந்தாயடி ??
கண்ணே!!
உன் சிரிப்பில் என்னைக்கொல்ல..

பெரும்புலவன் இல்லையடி நான்
பெண்ணே!!உன் அழகை வர்ணிக்க
இருப்பினும் முயல்கிறேன்
சிறு புலவன் என்றெண்ணி .....

பூக்களுமே நானுமடி பெண் பூவே..
உன் புன்முறுவல் கண்டிருந்தால் ...

கருப்பழகு என்றென்னும் காக்கைகளும்
தலை கவிழுமடி, பெண்ணே!! உன் கருங்கூந்தல் கண்டிருந்தால் ...

சந்திரனும் தலை கவிழ்வானடி,
பெண்ணே!! உன் வெண்முகம் கண்டிருந்தால் ...

எங்கிருந்து வந்தாயடி ??
பெண்ணே
என்னைக் கிறுக்க (கிறுக்கு பிடிக்க) வைக்க ...
பெண்ணே!!
எங்கிருந்து வந்தாயடி ??

Friday, July 24, 2009

!!!என் அம்மாவை பற்றி.....நான்கு வரிகள்!!!

"பாசம்" இம்மூன்றெழுத்தின்

புது விளக்கம் கண்டேன்

மூன்றெழுத்தே உன்னிடம் ,

"அம்மா" என் "பாச அம்மா "

Tuesday, July 21, 2009

தொடர்கவிதைகள் இருந்தால் அலுப்பு தட்டும் என்றெண்ணினேன் அதனால் மாறுதலுக்காக.நான் இணையத்தில் படித்து சிரித்தவை.சிரிக்க தெரிந்தவர்கள்! படித்து சிரிக்கலாம்

விளையாட்டுப் போட்டிகளுக்கு வர்ணனையாளர்கள் இன்றியமையாதவர்கள். ஆனா சில சமயங்களில் அவர்கள் அடிக்கும் கூத்துகள் வடிவேலுவையே மிஞ்சிவிடும்.. அவற்றுள் சில..

1) 1976 ; மாண்ட்ரீல் ஒலிம்பிக்ஸ். 800 மீ ஓட்டம் / வர்ணனையாளர் ; டேவிட் கோல்மன்.இவ்வளவு விரைவாக எவரும் இதுவரை ஓடியதில்லை ; எனினும் உலக சாதனை அளவுக்கு இல்லை..!

2) ஸ்னூக்கர் போட்டி / டெட் லோவ்.ஸ்டீவ் ரோஸ் நிறப் பந்துக்கு குறிவைக்கிறார். ஒருவேளை உங்களது டி.வி. கருப்பு வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு அடையாளம் சொல்கிறேன்.. பச்சைக்கு பக்கத்தில் இருப்பதுதான் ரோஸ் பந்து..!

3) மைக் கிரேட்டன் என்பார் ஒரு வீரரைப் பற்றி சொன்னது..ஜான் அமெரிக்காவில் பிறந்தவர்; என்றாலும் தாய்நாடான ஜப்பானுக்கு வந்துவிட்டார்.

4) 5000 மீ ஒட்டப் பந்தயம். / நம்ம டேவிட் கோல்மன்.அட்டகாசமான ஓட்டம்.. 14:58.89. என்ற நேரத்தில் ஓடிவந்து கிரிஸ்டியான்சன், ஒரு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்.. அதுமட்டுமல்ல நண்பர்களே.. அவர் இதுவரை ஓடியதிலேயே விரைவான நேரமும் இதுதான்.. ( பெர்சனல் பெஸ்ட்).

5) கோல்மன் தான்..இன்று அவர் 31 வயதைத் தொடுகிறார்.. சென்ற ஆண்டு இதே போட்டியில் விளையாடும்போது அவருக்கு வயது 30தான்..!

6) நீச்சல் போட்டி ./ அனிதா லான்ஸ்பரோ.அமெரிக்க 'மண்ணில்' தங்கள் திறமையைக் காட்ட ரஷ்ய 'நீச்சல்' வீரர்கள் முயற்சி செய்வது பாராட்டத்தக்கதே..!

Monday, July 20, 2009

!!ஒரு காதல் கடிதம்!! என்னவளுக்காக..... மட்டும் ......


"அழகு" இம்மூன்றழுத்த்தின் இலக்கணம் நீ .....
உன் அழகை வியந்து இறைவனே வைத்திருக்கிறானோ ???
திருஷ்டி பொட்டு அழகாய் உன் கன்னத்தில் மச்சமாய் !!!

கார் கூந்தல் இடை தொட அரிசி சடையிட்டு
அன்ன நடைபோட்டு ஓரப்பார்வை வீசினாய்
அன்றே தொலைத்துவிட்டேன் இதயத்தை உன்னிடம் !!

உன்னிடம் பேசவில்லை அன்பே பல நாளாய்
உன் குரல் இன்றும் கேட்கிறது
என்னுள்ளே இன்னிசையாய் ....
உனக்கல்லவா தரவேண்டும் "ஆஸ்கார் "

விட்டுவிடு..... அன்பே ,நான் தருகிறேன்.....
என் பெயரை உன் பெயருக்கு பின் சேர்க்க அனுமதி
மறுத்துவிடாதே ......
சிதைத்துவிடாதே என் இதயக் கோட்டையை
ஏற்றுக்கொள் கண்மணியே....
மறுக்காது .....

Wednesday, July 15, 2009

!!ரொம்பவே கம்யூனிசம்!!!

கூர்வாள் கொண்டு கூரிட வேண்டும் வா தோழா!!
கூட்டம் சேர்ந்து கொள்ளைகள் பல அடிக்கும்!!
சில கொடுரர்களை கூர்வாள் கொண்டு கூரிட வேண்டும் வா தோழா!!

பணி செய்ய பணங்கள் (லஞ்சம்) பல கேட்கும் சில பன்றிகளை
பந்தாட வேண்டும் வா தோழா!!
கதர் கட்டிக் கபடங்கள் பல செய்யும்
சிலக் காட்டேரிகளை களை எடுக்க வேண்டும் வா தோழா!!

அதிகாரத்தில் இருந்து அட்டூழியம் பல செய்யும் சிலஅரைவேக்காடுகளை அடியோடு அழிக்க வேண்டும் வா தோழா!!

பிரமுகர்களின் பினாமிகளாய் இருந்து பிரச்சனைகள் பல செய்யும் சில பரதேசிகளை பிடரிமயிர் பிடித்து வெளிக்கொணர வேண்டும் வா தோழா
இக்களைப்(புடுங்கும்) பனி செய்ய சில நூறு கைகள் போதாது
வேண்டுவது பல கோடி கைகள்.....

பல கோடி கைகளை எதிர்பார்த்து,
உங்களுள் ஒருவன் ..

Tuesday, July 14, 2009

!!எனக்கு சில சமயம் கிறுக்கத் தோன்றும் அப்பொழுது ஏதோ கிறுக்கியது!!!

ஏன் படைத்தாய் என்னை ?உண்ண உணவில்லை... உடுத்த உடையில்லை...இருக்க இடமில்லை... என்னவென்று கேட்க நாதியுமில்லை... இறைவா ஏன் படைத்தாய் என்னை ??


பரட்டைத்தலை, சிறுத்த உடம்பு ஈக்கள் மொய்க்க தெருவோரம் வெற்றுடம்புடன் கிடக்கிறேன் அநாதையாய் நான் உங்கள் மொழியில் என் பெயர் "பிச்சைக்காரன்"


"அரிசிச்சோறு", பார்க்கவில்லை பலநாளாய் நின்று கொண்டிருக்கிறேன் நாயுடன் போட்டிபோட்டு குப்பைத்தொட்டியினருகில், இன்று


அஹா!! இன்று என் பல நாள் கனவு ஈடேறும் நாள் கல்யாண சாப்பாடு இன்று


நான் பிச்சைக்காரன் காரணம் இரண்டே எழுத்து

"பசி"!"பசி"!"பசி"!


என் "உயிர்" என்னும் "மூன்றெழுத்தை" சாப்பிட்டிருக்கும்..."இவ்விரண்டழுத்து" நான் பாத்திரம் கையில் ஏந்தவில்லை என்றால்
ஏநதிவிட்டேன் கையில் கீழே வைக்க முடிய வில்லை இன்றுவரை

ஏங்குகிறேன் இறைவா!

எனக்கு மாளிகை வேண்டாம் குடிசையில் சுகமாய் வாழ்வேன் அறுசுவை உணவு வேண்டாம் மூவேளை கஞ்சி போதும் உயிர் வாழ
நான் பட்டாடை கேட்க்கவில்லை மானம் மறைக்க துணி கேட்கிறேன் உனக்கு மானமே இல்லையே!! என்று துணி கூட கொடுக்க மறுக்கிறாயே ??கேட்டதெல்லாம் கொடுக்காது உன்னிடம் கேட்காத அடி உதைகளை மட்டுமே தருகிறாயே??


இறைவா!! உன் காதுகளுக்கு "நல்ல மருத்துவம்"தேவை, இப்பொழுது ஒன்றே ஒன்று கேட்கிறேன்

தவறாது தயவுகூர்ந்து என் ஆசையை நிறைவேற்று என் உயிரை எடுத்துச்செல் தயவுகூர்ந்து எடுத்துக்கொள் நிறைவேற்றுவாய் என்ற எதிர்பார்ப்புடன்
--பிச்சைக்காரன்

Monday, July 13, 2009

!!!எம் மக்களுக்கேதிராய் இம்மான்புமிகு உலகத்தால் நடத்திமுடிக்கப்பட்ட இனப்படுகொலை சம்பந்தமாக அச்சமயத்தில் எனக்குத்தோன்றியவை!!!

என்று தீருமடா உன் பசி ??
என்று தீருமடா உன் பசி ??
சொல்ல வேண்டும் நிச்சயம் !!
மகிந்தா என்று தீருமடா உன் பசி??

கிழவன் கிழவி
ஆத்தாள் அப்பன்
சிறுவன் சிறுமி
குறைவின்றி கொல்கிறாய்
இன்னும் அடங்க வில்லையா உன் வெறி ??
சொல்ல வேண்டும் நிச்சயம் மகிந்தா என்று தீருமடா உன் பசி??

ஓ!! தமிழர் குருதியின் நிறத்தில்
சந்தேகமோ உனக்கு??
துளைத்துப் பார்க்கிறாய்
கொத்துக் குண்டுகளால்!!
சொல்ல வேண்டும் நிச்சயம்!!
மகிந்தா என்று தீருமடா உன் பசி ??

குருதிக் கடலில் மூழ்குகின்றனர்
என்னுயிர்கள் வன்னியில் !!!
மகிழ்ச்சிக் கடலில் மிதக்கிறாய்
நீ கொழும்பில்
என்னடா நியாயம் ??
சொல்ல வேண்டும் நிச்சயம்
மகிந்தா என்று தீருமடா உன் பசி??


!!இரத்தம் இரத்தம்!!
இரத்தம்!! இரத்தம்!!
ஐயகோ!! இரத்தம் !!
கதறுகிறாள் என் சகோதரி
பிணக்குவியலின் நடுவே
தன் உயிரற்ற மகனின்
சடலத்தைக் கையிலேந்தி
இறைவா மன்னித்துவிடு
நான் இன்று முதல் நாத்திகன்!!

Friday, July 10, 2009

ஒரு வார்த்தை

பெண்ணே !!
ஒரு வார்த்தை,
ஒரே வார்த்தை,
ஹலோ! போதும்,
என் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிவிடும்.

Thursday, July 9, 2009

!!!கொடுமை!!!

"முதுமை" "தனிமை" இவ்விரெண்டு
மூன்றெழுத்துக்களும் தெரிகிறது
உன்னிரெண்டு கண்களில் தெளிவாக அம்மா!!

"பிள்ளை இருந்தும் மலடியடா",
என்று சொல்கிறாயோ அம்மா!!
உன் ஏக்கப்பார்வையால்???

முதுமையில் முக்கால் பெறுவார்கள் இயற்கை
உனக்கும் பொருந்துகிறதோ??
அம்மா!!

நிற்கிறாய் துடைப்பம் என்ற
மூன்றாவது காலோடு
தரையைத் துடைத்தவாறு...

ஒரு காதல் கடிதம்

என்னுயிரே..என் காதலியே..
இன்றும் வாழ்கிறேன்
உன் நினைவால் பிணமாக...

கண்ணே!! எத்தனை மாற்றங்கள் ??
இப்பொழுது என் தலைமுடியின் நிறம் வெள்ளை
ஆனால் உன் நினைவுகள் இன்றும் வாழ்கிறது என்னுள்ளே அதே பசுமை மாறாது

காலம், இல்லை, அரக்கன்!!
அன்பே!! உன்னை என்னிடமிருந்து பிரித்து விட்டான்
உன் நினைவுகளை பிரிப்பதில் தோல்வியுற்றான்
வெற்றிக் களிப்பில் இன்றும் சிரிக்கிறேன் நான் ஏளனத்தோடு அவனைக்கண்டு...

என்னுயிரை மாய்க்கவில்லை நான் அன்பே!
என்னுள் வாழும் உன்னைக் கொல்லத்
திராணியில்லை எனக்கு!!

ஆருயிரே நீ இவ்வுலகை விட்டு மறைந்திருக்கலாம்
வாழ்கிறாய் என் இதயத்தில் இன்றும்
வாழ்வாய் என்னுயிர் பிரியும் வரை....

இப்படிக்கு,
ஆருயிர்க்காதலன்