Sunday, November 27, 2011

என் காதலியே...

மனதில் பிறந்து ..
மூளையில் வளர்ந்து ..
பேனாவில் இறங்கி ..
கவிதைகளாய் இறக்கிறது என் காதல் ..
மீண்டும் அவளை பார்க்க..
மறுபிறவி கொள்கிறது மனதில் கனவோடு..
மீண்டும் இறக்க..
சொல்லாமல் சேர்த்த காதல் ..
மனதை கனமாக்கி..
கண்ணீராய் முட்டி நின்று ..
தனிமையில் அழ செய்கிறது ..
இறுதியில் கவிதைகளாய் செத்து விழுகிறது ..
 தோல்வி உறுதியாயினும் , வேண்டும்..
என் காதல் கங்கை வற்றும் முன்...
வந்து விடு 
என் காதலியே...

Monday, October 31, 2011

வாழ்க வாழ்க ..!

தெளியா மயக்கம் 
தலை சுற்றி நான் உளற
தலை சாய்த்தேன்..
எல்லாம் புரிந்தவளாய் 
சிரித்தாள் ..காதல் பேசினாள்..
முத்தம் கேட்க ...
வைத்தாள் கன்னத்தில் ..
கட்டி நிற்க கடிந்த சொல் இல்லை..
முத்தம் முத்தம்..
 முத்தம் மட்டுமே !
"ஏன் இவ்வளவு அழகு ?"
நான் கேட்க ..பதில் இல்லை..
"புன்னகை மட்டும் "
வேறென்ன செய்ய ..
வைத்தேன் முத்தம் பரிசாய்..",
போதை காட்சி இது ..
எல்லாப் புகழும் போதைக்கே 

சிலருக்கு "காதல் = போதை "
இல்லாதோர்,இழந்தோர்க்கு "போதையே காதல் "
"போதை=விஷம் .."
காதல் செய்யாதோர் செய்துதொலைத்தோர் , விஷம் என்பர் காதலை ..
ஆதல் ..
காதல் = போதை .எனலாம் 
போதை ஒழிய வேண்டும்..
காதல்.....??
தவறு.. தவறு ...
கவிதைகள் பிறக்க வேண்டும்..
காதல் போதை வாழ்க வாழ்க !
காதல் வாழ்க !
போதை அவள் வாழ்க !
வாழ்க வாழ்க ..!

Thursday, July 21, 2011

பேனாவும் பெண்பாலோ?

கண்ணீர் மல்கி      
கவிதை  தீட்ட 
மை தீர்ந்தது.. 
பேனா  உதறினேன் ..
"அவள்  என்னை  
உதறி  அறைந்தது"  
கண்ணில்  தெரிய ..
தெரித்தது மை..
என்  உயிர் தெரித்தாற்போல்  ..
கிறுக்கி  எழுத  முயல ..
தாள் கிழித்தது ..
என் அருமை  பேனா!
அவள் என் இதயம்  கிழித்தாற்போல் ..!
பேனாவும்  பெண்பாலோ? 

Tuesday, June 21, 2011

!"கனவே என் காதலி "!


காணாமல் போய்..
கலங்கி நிற்க ..
கைகள் நீட்டி ..
காத்துதவுவாள்..
என்  "அவள் "

காலத்தில் கரைந்து ..
கண்ணீரால் அழிக்கப்படும் ..
சில காதல் ..
கனவில் உயிர் பெறும்   பல ..  
ஆனால்
"கனவே என் காதலி "

காலம் கணக்கில்லை ..
பகலும் அவளுடன்..
இரவும் அவளுடன் ..
தெரியாதென்று நினைத்தேன் ..
அப்பா சொன்னார், ..
"பகல் கனவு காணாதே "
என் காதல் வீட்டிற்க்கும் தெரிந்ததுதான் ..
எதிர்ப்பில்லை ..
என் அப்பா நல்லவர் ..!
அம்மாவும் கூட..!

"கனவே என் காதலி "
கலையாத கனவு 
கட்டி பின்னிய 
பெண்கள் சடை  போல ..
"அழகு அவள் " !
வர்ணங்கள் கொண்டவள் ..
என்னை புரிந்தவள் ..
புரிந்தவளிடம் ..
உன்னை தொலைத்து ..
தொலைந்த பின்  தேடு..
கனவில் தொலைந்தேன் ..
தேடினேன் ..

கனவே என் காதலி ..
கதை கத்தை கத்தையாய்..
கவிதைகள் காதலுடன்..
கதையாய் கவிதை கத்தை கத்தையாய் ..
எல்லாம் எழுதலாம்..
என் அவள் பற்றி ..
கனவே என் காதலி ..
"என் காதலே கனவு .."

Tuesday, May 17, 2011

!என்ன செய்யப்போகிறாளோ ? !


கை பிடித்து சேர்ந்து நடந்து 
கால் வலிக்க,
கரையோரம் உட்கார்ந்தோம் .
அவள் ஏதோ பேசினாள்..
அழகால்  கொன்றாள்..
செத்து ரசித்தேன் ..
"அவள் அழகு.."

அவள் கூந்தல் கடலில் ...
மூழ்கி இறக்கலாம் ..
"அவள் அழகு" ..

தலை சாய்த்து என்னவென்றாள்..
தலை சுற்றியது அழகு ..
"அவள் அழகு" ..

கொட்டிகிடக்கும் அழகில் 
பூத்துக்குலுங்கும் 
அவள் சிரிப்பு..அழகு 
"அவள் அழகு" 

மனதில் பிறந்த கவிதை அடக்கி 
சிரித்தேன் என்னவென்றாள் ...சிரித்தபடி 
சிரிப்பால் பதில் சொன்னேன் வார்த்த்தைஇன்றி..
புரிந்தவளாய் சிரித்தாள் ..
பார்த்துக்கொண்டே  இருந்தோம் ..
சேர்ந்தே கொன்றோம்  காலத்தை..

சூரியன்  கடலில் மறைய 
அவள் அழகு கூடியதாய் என் கண்கள் பார்த்தது..
இடைவெளி குறைத்து 
அலுங்காமல் அவளை அனைக்க முயல ..
முறைத்தாள்..
அழகு ..கொள்ளை அழகு 
அவள் ..

முறைத்தால் என்ன ..
முத்தம் வைத்தேன் கைபடாமல் கன்னத்தில் ..
கசங்காத ரோஜா, சிவந்த உதடுகள் ..
கண்களில்   பட
அங்கேயும் ஒன்று
 தந்து  விட்டு 
நான்  மெதுவாய் ஓட  
சிரித்தபடி  என்னைத் துரத்தினாள்..
ஓடினேன் ..ஓடினேன்..
எழுந்துவிட்டேன்...
நாளை கனவில் ..
என்ன செய்யப்போகிறாளோ ?

Wednesday, April 20, 2011

!நாம் என்ற சொல்லில் நான் உண்டு !

"நாம்" என்ற சொல்லில் 
"நான்" உண்டு ஆதல் 
நாம் விடுத்து ..
நான் எடுத்தேன் தப்பிக்க..

நான் நடிகன் 
படத்திலல்ல.
கை விரல்கள் தேயும் 
என் வேடங்கள்
எண்ணி எண்ணி..
ஆதல் எண்ணுவதில்லை..

"காதல் செய்ய 
சிரிக்க, அழ 
புண்படுத்த கோழையாகி..
குழந்தை தூக்க அம்மாவாக ..
மனைவியிடம் குழந்தையாகி..
போட்ட வேடங்கள் எத்தனையோ..!!
பின்னிரு வேடங்கள் தந்தது 
சந்தோசமே ..!
மற்றவை கேள்விக்குறி..!

நானும் உண்மையாயிருந்தேன் ..
நடிப்பின்றி நானாயிருந்தேன்..
"திறமையில்லை ..ஒன்றுமில்லை .."
நாம் சொன்னவை ...
நான் அப்போது நாம் இல் இல்லை ..!

இப்போது நான் 
நடிகன்
 மகா நடிகன் ..
நான் இப்போது நல்லவன் 
திறமையுள்ளவன் ..
நடித்தலே நலம் ..
இல்லை நாயினும் கீழே போவாய் ..
நாம் வகுத்த விதி அது ..

நான் கதை  கவி வரைவேன்  கனவில்..
கனவில் மட்டுமே..
கனவு கலைந்ததும்..
வேடம் ..வேடம்..

"வாழ்வு மாயமில்லை ..
வாழ்வே வேடம் இந்த வாழ்வே வேடம் .."
சிரித்து பாடி மூளை 
எழுத சொன்னது ..
"இயல்பாக நடி 
வாழ்க்கை - வெற்றி "
உண்மையோ ?
நான் நடிக்கிறேன் ..
எழுதுவதாய் நடிக்கிறேன் 
பிடித்ததுபோல் 
யாவரும் நடிக்க வேண்டுகிறேன்..

நாம் என்ற சொல்லில் 
நான் இப்போது உண்டு 
ஆதல் நாம் விடுத்து 
நான் எடுத்தேன் தப்பிக்க..

Monday, April 18, 2011

!"என்னடா இது ? இது கவிதையா?" !

நீண்ட இரவில்..
தூக்கமின்றி புரண்டு படுத்தேன் 
கண்கள் மூடி 
தூக்கத்தை அழைத்தேன் 
அணைக்க..
புதுபெண்ணாக  வரமறுத்தாள்
புரண்டேன்..
சே ! என்று கண் விழித்தேன்
அவளைக் கடிந்தவாறு ..


எதிரே 
மலைமுகட்டை முத்தமிட்டுக் கொண்டே ..
எழுந்தான் சூரியன் 
பொறாமை தீ என்னுள் பற்றியது ..
திரும்ப கண்மூடி கெஞ்சினேன் ..
வரமறுத்தாள்..
எழுந்துவிட்டேன் கோபம் கொண்டு .



ஜன்னலருகே போய் நின்று 
அவர்களின் காதலை 
ரசித்தேன் ..சிரித்தேன் ..
திடீரென என கைகள் பேனா 
தேடி காகிதம் கிழித்து 
எழுதியது..
எதைப்பற்றியோ?
நான் எழுதுவதாகக் கூட 
இருக்கலாம்..

"போட்டி போடாதே 
போட்டியிட்டாலே ..
தோல்வி பயம் 
வெற்றி யாது ?
உன் வெற்றி அவன் தோல்வி ..
அவன் வெற்றி உன் தோல்வி ..
யாவரும் வெற்றி பெற 
போட்டி கூடாது..
புறந்தள்ள வேண்டும்.. 
கொலைசெய்ய வேண்டும்..
தப்பாக சொல்லிவிட்டேனோ?
தவறான கருத்தோ ??
போட்டி போடு ..
வெற்றி பெறு..உன் இஷ்டம்
 என்னடா இது ??
இது கவிதையா??"


எழுதிவிட்டு கை உதறினேன் ..
சூரியனின் முத்தத்திற்காக 
ஏங்கி காத்திருக்கிறாள் மலைமுகடு ..
மாலைவரை தானே   இருக்கட்டும் ..
என்னடா இது ?
இது கவிதையா ?
மறுபடி அவளே என்னை அழைத்தாள்..
சூரியனைப் பார்த்து 
ஏளனச் சிரிப்பு சிரித்து ..
அவளை அணைத்தேன் 
கண்கள் மூடினேன் 
"தூக்கம்" என்னை ஆட்கொண்டுவிட்டாள்..

"என்னடா இது ?
இது கவிதையா?"
என்னை நான் கேட்டது ..

Thursday, March 31, 2011

புரியாத புதிர் வாழ்க்கை ..! என் கவிதை ??

வா! என்றழைத்து ..!
ஆசை காட்டி 
மயக்கி..
சிரித்தபடி அனைத்து 
செல்கிறது  வாழ்க்கை
நம்மை மரணம் நோக்கி 
இதனிடையில் 
ஆர்மோன்களை மூளை தட்ட 
போதை தலைக்கேறி 
கிறுகிறுத்து 
அவளைத் தேடுகிறோம் ..
உண்மை அறியாது ..

வாழ்க்கை 
சோகம் மகிழ்ச்சி தந்து 
உன்னை உனக்கு எதிரியாக்கும்
பார்த்து சிரிக்கும்.

சோகங்கள் குவிந்து 
மனதெங்கும்  நிரம்பி வழிய 
உடலெங்கும் சோக விசம் 
பரவி மனதை உடைத்து ..
அழுத்துகிறது 
உதவி உதவி !

அழுகை முட்டிய நாட்கள் 
நீண்டு சிரிக்கின்றன 
 என்னை பார்த்து 
காரணமின்றி ..

புரியாத புதிர் 
வாழ்க்கை ..!
என் கவிதை ??

Sunday, March 20, 2011

!நீ திருடிய என் வெற்றி.!

என் தோல்வியென  நினை ..!
நீ செயி..!
என் தலையில் குட்டு 
ஏறி நடந்து செல் ..
மேல்நின்று சிரி.
"நேர்மை சாகடி" ..
நீ புகழ் கொள்..
வானில் மித ..
காரணம் நான்
"என் தோல்வி" 

நீ செயி மித..
உன் வெற்றி உன் தலைக்கு செல்லும் ..
 தலை பெருக்கும்..
ஆணவம் பரவும்..
மதியாது செல்வாய்..

என்னை பார் சிரி..
தோல்வி இனிக்கிறது .
வரப்போகும்  வெற்றி கண்டு.

நீ கோபம் கொள் ..
தவறு செய்..
தவறுகள் பெருகும் ..
மூழ்கடிக்கும்..
மூச்சுமுட்டும்..
நீ கொன்ற நேர்மை 
உன்னை கீறும் 
குத்தி சாகடிக்கும்..
"செத்துப்போவாய்.."

என்னை மண்ணில் புதைத்தாய்..
உள்ளே தெரிந்தது உன் எதிர்காலம்..
முளைத்து  வருவேன்..
நான் விடேன்..! என்று 
நீ திருடிய 
என் வெற்றியைத் தேடி .. 

Monday, February 21, 2011

!எந்தன் மூளையின் காதல்!

அடங்கா எண்ணங்கள்..
அலையென திரண்டு..
உயிர் புகுந்தன..
இதயம் தட்டி..
"கேள்..கேள்",என்றன 
என்னுள் நேற்றிரவு..
தூக்கத்தை பொருட்படுத்தாது..
மூளையை தட்டினேன்.

தூக்கம் தெளிந்தவனாய்..
"என்ன", என்றது..
தலையை சொறிந்தபடி சொன்னேன்..
"காதல் கவிதை ஒன்று வேண்டுமென்று."
இந்தா பிடி என்று..
காதினுள் ஓதியது..


"காதல் 
காலுண்டு இவ்வார்த்தைக்கு..
கண்களில்லை..
இவ்விலக்கியத்தில் 
முத்தங்களே இலக்கணங்கள்..
சிலசமயம் வேறுபடும்..
அங்கே ..
இலக்கணங்கள் உடைபடும்..

காதல் 
வயதுகளை மறக்க செய்யும்..
குழந்தை ஆக்கும் .
சிரிக்க வைக்கும்..
கண்களை பேச செய்யும்..
இதய மொழி புரிய வைக்கும்..
அழ வைக்கும்..
காதல்..
தூக்கம் வராமற் செய்யும்..
வந்தாலும்..
அவளை கனவில் 
வர செய்யும்..
முத்தங்கள் தர செய்யும்..
கனவைக் கவிதை ஆக்கும்..
வாழ்வை இனிப்பாக்கும்..

மொத்த இலக்கியங்கள்..
முத்த இலக்கணங்கள்..
கவிதைக் கனவுகள்..
அவளின் முத்தங்கள்..
 யாவும் வேண்டுமெனில்..!
செய்வீர் காதல்!
செய்வீர் காதல்.!"

சொல்லி தூங்கின மூளைகள்..
எழுந்த அலைகள்.
அமைதியாய் அடங்க..
கவிதைக்குள் கவிதை செய்தேன்..
அதை பதிவு செய்தேன்..
காதலுடன்..!

Friday, February 18, 2011

வரம் தந்த அவளுக்கு..!

மனதின் வலிகள்..!
சிகப்பு மையாய்..
வலிந்து ஓட..
காகிதம் எங்கும் 
இரத்தம் ..!
இரத்தம்..!

சொட்டு சொட்டாய் ..
வடித்த கண்ணீர்..
காகிதம் நனைத்து..
இரத்தம் அழித்து..
சித்திரம் வரைந்து ..
வலிகள் போக்கி..
மாயம் செய்தது.
அழுகை..
வலிகள் போக்கும் வரம் !
வலிகள் உண்டோ  ?
அழு..!
கதறி அழு ..!
கோழையோ?
பயம் வேண்டாம் ..
பயமின்றி அழு..
பயபடுபவன் கோழை.!
கண்ணீர் மருந்து..
கொண்ட காயம்..
கரைய வேண்டும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுகை..
உலக மொழி..
குழந்தை மொழி..
யாரும் அறிவார்..
 கேளாமல் 
விடை தரும்..
உதவி வரும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுது முடித்து 
கண்கள் மூடு ..
சொக்கும் தூக்கம் ..
கனவு கூடும் ..
அங்கே காகிதம் தீரும் ..
வலிகள் 
கவிதையாய் பிறக்கும் ..
காயம் ஆறும் ..
இதயம் ஒட்டும்..
சக்தி பிறக்கும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுத...
மறுநாள் எழுந்தேன்..
வந்த யாவும் உண்மை..
உணர்ந்தேன்..
காகிதம் தீர்கிறது..
இடை இடையே 
சொட்டுக் கண்ணீர்கள்..
முற்றுபுள்ளிகளாய்.
தீர்ந்தது கண்ணீர் .
சிரித்தேன்..
வலிகள் இல்லை..
அழுகை  பிடிக்கிறது...
வரம் தந்த அவளுக்கு..
நன்றி.. !
நன்றி..!

Monday, February 14, 2011

!"வெற்றி நமதே" !

தோல்விகள் துரத்தி..
அடித்து 
வெற்றி..வெற்றி..!
என்று கீழே தள்ளி..
முறைத்த..
பயந்து போய்..
அழுது..இறுகபிடித்தேன்..
தலையணையை..
கண்கள் மூடி ஜெயிக்கும் இடம் நோக்கி..
சென்றேன்..!


வெண்மை..! வெண்மை..!
யாவும் வெண்மை..!
என்ன இது?
"உள்ளம்", என்றது குரல்..!
"உள்ளம் ", வெள்ளை ?
விழித்தேன்..!
"இருத்தல் நன்று"
என்றது குரல்..!
குறிப்பெடுத்தேன்.

பக்கத்தில் படிக்கட்டுகள்..!
வானம் நோக்கி..
செல்ல..
ஏறினேன் ஆசையாக..!
வெற்றி..வெற்றி..!
கத்திக் கூப்பாடிட்டேன்..!
வெற்றி நோக்கி சென்றபடி..

"தோல்வி தோல்வி..!",குரல்.
என்ன?
"படிக்கட்டுகள்" என்றது குரல்.!
"ஓஹோ !"
என்று குறிப்பெடுத்தேன்.


போன இடத்தில் ..
மெத்தை ஒன்று கிடக்க..
போய் பாய்ந்தேன்..
குதூகலம்.!!

அங்கே ..!
கண்மை காமமிட்டு..
கருமை கூந்தலில் ..
வெள்ளை மல்லி சூடி..
மணக்க வந்தாள் ஒருத்தி..
அழகில் மயங்கிகிடக்க..
என்னை..
ஓடிவந்து தழுவிக்கொண்டாள்.!!!
தள்ளிவிட மனமில்லை 
தழுவட்டும் என்றிருந்தேன்..!

"யோ அசரீரி .!
யாரிவள்?" வினவினேன்.
"வெற்றி..!
வெற்றி..!",என்றது குரல்.!
சிரித்தபடி..

அள்ளி அணைத்தவள்..
திடீரென..
தள்ளிவிட்டு திரும்பாமல் செல்ல..
திடுக்கென்றது..
துரத்தி ஓடினேன்..!
"நிரந்தரமில்லை",குரல்.
"என்ன? ",நான் !
"வெற்றி ",குரல்.
குறிப்பெடுத்தேன் .கண்ணீர் துடைத்தபடி..
சிரித்தபடி.!
துரத்தி ஓடினேன்..
ஆயிரம் படிக்கட்டுகள்..தாண்டி..
அவளை மீண்டும் அனைக்க.

கண் விழித்தேன் !
எங்கும் "தோல்விகள்...!"
இல்லை "படிக்கட்டுகள்..!"
கட்டி அனைப்பேன் "அவளை" ஒருநாள்..!
இல்லை "வெற்றியை"..!
"வெற்றி எனதே" 
இல்லை 
"வெற்றி நமதே" 

Saturday, January 29, 2011

! இதயம் கொண்ட இறைவா..!

காதல் மொழி 
அவள் 
கண்கள் பேச ..!
நான் 
கண் மூடி 
கூந்தலலையில் 
மூழ்கிய தருணங்கள்.

நான் 
வைத்த முத்தங்கள் அவள்..
கன்னங்கள் நனைக்க..
அவள் 
விழியால் சுட்டு .
என் 
இதயம் உடைத்து ..
அள்ளிய நிமிடங்கள்.
அவள் 
பேசி சிரித்து ..
அனைத்து தழுவிய 
நேரங்கள்.

அவள்  
கண்மை 
கரைத்து வந்த ..
கருப்பு கண்ணீர்..
கையில் ஒட்டி...
உயிர் புகுந்து ..
வெடித்து ,,
இதயம் கொன்று ..
சென்ற தருணம்..

யாவும் 
கூடி ..
மீண்டு வந்த என்னை ..
மீண்டும் மீண்டும் கொல்கின்றன..
இதயம் இல்லாது ..

இறைவா ..!
சிதறிய இதயம் ஒட்ட..
வலி தீர .
ஒரு வழி வேண்டும் ..
இறைவா..!
இதயம் கொண்ட இறைவா..!

Tuesday, January 25, 2011

!லைட் போட்ட புண்ணியவான்....!

களைத்து வந்து...
 கண்கள் மூடி..
கனவில் விழுந்தேன்..
"காதல்" சுவைக்க.

அவள் பார்வை அம்புகள்..
இதயம் கிள்ள..
பார்த்து சிரித்தேன்..
பதில் சிரிப்பு..
சிரிப்பில் தவறி விழுந்தேன்..
மீண்டு வர..
மீண்டும் சிரிப்பு..
விரும்பி விழுந்தேன்..
திரும்பும் எண்ணமில்லை...

பாடினாள்.."குயில்" என்றேன்..
"கதை" என்றாள்...
"கவிதை" என்றேன்..
சிரித்து கண்ணிமைத்தாள் 
பேச்சற்று ..பார்த்தேன்..
 நின்றேன்..!

புருவங்கள் நடனம் ஆட..
பேசினாள்..
மயங்கினேன்..

திடீர் வெளிச்சம் ..
தூக்கம் கெடுக்க..
விழித்தெழுந்தேன்..
கலைந்தது  கனவு ..
இதயமும் கூட...

லைட் போட்ட புண்ணியவான்...
வாழ்க..!
வாழ்க..!