Wednesday, April 20, 2011

!நாம் என்ற சொல்லில் நான் உண்டு !

"நாம்" என்ற சொல்லில் 
"நான்" உண்டு ஆதல் 
நாம் விடுத்து ..
நான் எடுத்தேன் தப்பிக்க..

நான் நடிகன் 
படத்திலல்ல.
கை விரல்கள் தேயும் 
என் வேடங்கள்
எண்ணி எண்ணி..
ஆதல் எண்ணுவதில்லை..

"காதல் செய்ய 
சிரிக்க, அழ 
புண்படுத்த கோழையாகி..
குழந்தை தூக்க அம்மாவாக ..
மனைவியிடம் குழந்தையாகி..
போட்ட வேடங்கள் எத்தனையோ..!!
பின்னிரு வேடங்கள் தந்தது 
சந்தோசமே ..!
மற்றவை கேள்விக்குறி..!

நானும் உண்மையாயிருந்தேன் ..
நடிப்பின்றி நானாயிருந்தேன்..
"திறமையில்லை ..ஒன்றுமில்லை .."
நாம் சொன்னவை ...
நான் அப்போது நாம் இல் இல்லை ..!

இப்போது நான் 
நடிகன்
 மகா நடிகன் ..
நான் இப்போது நல்லவன் 
திறமையுள்ளவன் ..
நடித்தலே நலம் ..
இல்லை நாயினும் கீழே போவாய் ..
நாம் வகுத்த விதி அது ..

நான் கதை  கவி வரைவேன்  கனவில்..
கனவில் மட்டுமே..
கனவு கலைந்ததும்..
வேடம் ..வேடம்..

"வாழ்வு மாயமில்லை ..
வாழ்வே வேடம் இந்த வாழ்வே வேடம் .."
சிரித்து பாடி மூளை 
எழுத சொன்னது ..
"இயல்பாக நடி 
வாழ்க்கை - வெற்றி "
உண்மையோ ?
நான் நடிக்கிறேன் ..
எழுதுவதாய் நடிக்கிறேன் 
பிடித்ததுபோல் 
யாவரும் நடிக்க வேண்டுகிறேன்..

நாம் என்ற சொல்லில் 
நான் இப்போது உண்டு 
ஆதல் நாம் விடுத்து 
நான் எடுத்தேன் தப்பிக்க..

No comments:

Post a Comment