Thursday, November 12, 2009

! இந்த வாரம் கொஞ்சம் கிறுக்கலாம் என்று சிந்தித்தபோது என் மதியில் உதித்தது...மழை, மேகம், பூமி வெப்பமயமாதல் ..எல்லாம் இணைத்திருக்கிறேன் ஓர் கவிதையில் !


பெண்மேகம் அழுதாள்....
மனமுருகி...
நம் மக்கள் நிலைகண்டு
மழைத்துளியாய்.....
துடைத்தாள் பலர் கண்ணீரை....
தன் விழி மழை நீரால்....
என் அன்பு பெண் மேகம்...

நன்றி மறப்பது மனிதர் இயல்பு என
வெகு தெளிவாய் எடுத்துரைக்க...
எங்கள் கண்ணீர் துடைத்த...
கொடைப் பெருந்தேவியே...
உன்னை உருக்குலைக்க...
கரியமில வாயு என்றரக்கனை...
ஏவிவிட்டோம்...
உன் கோபக் கனலில் சிக்கிவிட்டோம்...



உன் விழி மழை நீராலேயே...
எங்களை தண்டிக்க என்னிவிட்டயோ...
வீசுகிறாய் பெரும்புயலாய்
என் தமிழ்நாட்டில்....
உன் கோபம் தாங்க
சக்தி இல்லை எம்மவர்க்கு...
மடிகிறார் உந்தன்
கோபக் கொலைப் பார்வையில்....
யாம் செய்த தவறு மறந்து...
தாயே உந்தன் கொலை பார்வை நீக்கி..
உந்தன் கொடைப் பார்வை வேண்டுகிறேன்...
நல்குவாயாக...

-நான் தமிழன்

Sunday, November 1, 2009

!!! நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிப்பு ..வாரம் ஒரு முறையாவது இனி வலையை புதுப்பிக்க முயல்வேன் !!


என் தனிமையின் அவதாரங்கள்


"தனிமை - கசப்பு "
தனிமை கிடைத்தும்
உன்னோடு ஓர் வார்த்தை பேசாது
நான் ஊமை யாகி போன அச்சமயம்
கசந்தது தனிமை
"தனிமை-கசப்பு"


"தனிமை-இனிமை "
வெகுதொலைவு உன்னைவிட்டு
நான் வந்துவிட
இங்கேயும் அதே "தனிமை" கிடைக்கிறது
உன் நிழற்படத்துடன்...
நிறுத்தாது பேசுகிறேன்...
இனிக்கிறது தனிமை
"தனிமை -இனிமை"


"தனிமை -கொடுமை "
வெற்றறையில் உட்க்கார்ந்து
வாய் மணக்க அழகு தமிழ்
பேச ஆளின்றி
என் குடும்பத்தின் நினைப்பு தொற்றி..
வழியும் விழி நீர் துடைக்கிறேன்..
கொடுமை செய்கிறது தனிமை..
"தனிமை - கொடுமை "


"தனிமை - என் ஆசான் "
வாரம் ஓர் முறையாவது
என்னைக் கிறுக்க வைக்கிறார்..
உங்களை (என் கவிதைகளை வாசிப்போர் ?)
சிரமத்திற்குள்ளாக்குவதில் என்ன மகிழ்ச்சியோ
என் தனிமைக்கு ஞானறியேன்...!!

என் தனிமை தசாவதாரம்
எடுக்க இன்னும் சில காலம் எடுக்கும்
என நினைக்கிறேன்...

-நான் தமிழன்