Wednesday, August 26, 2009

!!மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரையும் பொங்கி எழ செய்யும் இக்காட்சி ..

குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.

http://www.channel4.com/news/articles/world/asia_pacific/is+this+evidence+of+sri+lankan+aposwar+crimesapos/3321087

இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.



கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே.








!!இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.??!!






தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.






ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.



எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.
தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.

Tuesday, August 25, 2009

நான் படித்து,பார்த்து,கேட்டு ரசித்த ஒரு சினிமா பாடல் !!படம்: முதலாளி

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு
நீயேஅன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!


தென்னை மரச் சோலையிலே
சிட்டு போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

- கவி கா.மு.ஷெரீப்

Friday, August 21, 2009

!!!இதோ இந்த வார கிறுக்கல்!!!


நான் தொலைநோக்கன் !
நீ தொலைநோக்கியாய் இருப்பாய்
என்பதை ஞான் அறிவேன்...
நம் எதிர்காலத்தை தொலைநோக்க
இந்நிகழ்காலத்தில் முயல்வோமே!
என்னுயிர் தொலைநோக்கியே !!

அழகாய் வீடு
அருகே தோட்டம்
மிக அருகே மிக அழகாய் நீ !!
அந்நகர நரக வாழ்க்கை !
உன்னால் நகர சொர்க்கமாகுமே !!

ஒவ்வொரு வெள்ளியும் "நிலாச்சோறு "
உண்டு ," மறவாதே! " , வெண்மதியே !
முதல் வெள்ளியன்று உன்
செவியில் மிக மெலிதாய் சொல்வேன்
கவிப்பேரரசின் கவிதை வரிக் கவர்ந்து

"!உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே! "
அந்நிசியில் உன் வெட்கம் காண
வேண்டுமே கண்கள் கோடி !

"திகட்டுகிறது" என்றெண்ணம்
என் மதியில் "உதிக்கிறது "!
தற்சமயம் இத்தொலைநோக்கு ...
மிக அதிகம்
என நினைப்போர் நிலை அறிந்து
இத்தோடு முடிக்கிறேன்
மிச்சத்தை நேரிலே சேர்ந்தே
நோக்குவோம் ...
என்னுயிர் தொலைநோக்கியே!!
இப்படிக்கு,
தொலைநோக்கன் (நான் தமிழன்).

Sunday, August 16, 2009

!!நான் படித்ததில் பிடித்தது !! "பாரதியார் கவிதை"

பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?


நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே
இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும்
இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங்
கவலையறச் செய்து - மதிதன்னை
மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

Saturday, August 15, 2009

!!கட்டுரையும் கூட எழுதுவேன் நான்!! நம் சுதந்திரம் பற்றி ஒன்று!!

நண்பர்களே!
இன்று அறுபத்தி மூன்றாம் ஆண்டு சுதந்திர தினம் ,அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் . தோழர்களே ! உங்களுடன் இந்நாளில் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பழம்பெருமை பேசி, எவ்வாறு சுதந்திரம் பெற்றோம்? எப்படி பெற்றோம்? என்பதில் காலத்தை வீண் அடிப்பதில் எனக்கு விருப்பமில்லை என் மனதில் பட்டதை நான் இங்கு கூறுகிறேன் ...

யாருக்கு இங்கு சுதந்திரம்?

எங்களுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று கூறி ஊட்டியில் ஒய்யாரமாக ஒரு பங்களா , கோடைக்காக கொடைக்கானலில் ஒரு வீடு ,ஆசைக்காக ஆந்திராவில் ஒரு தோட்டம் என்று சுதந்திரமாக வாங்கி குவிக்கிறார்களே சில மாண்புமிகு அரசியல்வாதிகள் !!

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ?

நாங்களும் இந்நாட்டின் குடிமகன்களே என்று சொல்லி நாங்களும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று என் மாணவன் மற்றும் பெற்றோரின் உதிரத்தையே உணவாய்க் கொண்டு உயிர் வாழ்கின்றனவே அட்டைப் பூச்சி கல்லூரிகள்

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ?

இல்லை ...
சில நவ நாகரிக மங்கைகள் இதுதான் சுதந்திரம் என்று தங்கள் ஆடைகளிலேயே தெரிவித்து "பாரதி கண்ட புதுமைப்பெண்கள்" நாங்கள் என்று நினைத்து நம் கலாச்சாரத்தை சீர்குலைக்கிறார்களே !!

இவர்களுக்குத்தான் சுதந்திரமோ ?

"இந்நாட்டில் கூலிக்காரன் மகன்
அவனது கனவுகளை மனதில் புதைத்து கூலிக்காரனாகவே பட்டாசுத்தொழிற்சாலையில் அவனது கனவுகளோடு சேர்ந்து சாம்பல் ஆகிறான்."

"சீமான் மகனோ
அவன் கனவுகளை அடைய விமானத்தில் ஏறி பறக்கிறான் "
ஏன் இந்த வேற்றுமை ?"கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்"என்பான் ஆத்திகன் .
நாத்திகன் என்ன சொல்ல ?"விடை தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும் ."

நம் மாணவன் எத்தனை பேர் தான் நினைத்த படிப்பைப் படிக்கிறான் தன் கனவை அடைகிறான் ? பதில் : மிக சொற்பம் !
தற்பொழுது "கல்வி" என்பது"வியாபாரம்". கல்விக்கு நன்கொடை கொடுத்தே தேய்கிறார் என் தமிழ் பெற்றோர் !!

"முன்னேற்றம் இல்லை " என்பது என் வாதமன்று குறை கூறுவதே என் பிழைப்பன்று !!

"சந்திராயனை " சந்திரனுக்கு அனுப்பிவிட்டோம் பெருமை கொள்கிறேன்! முன்னேற்றமே !

அதே சமயம் " என் விவசாயிகளை " தஞ்சையில் கஞ்சிதொட்டியில் கஞ்சி குடிக்க வைத்திருக்கிறோமே ! வெட்கப்படுகிறேன்! .

காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போகிறோம் பெருமைப்படுகிறேன் !

அதே சமயம்"காமன்வெல்த் " என்றால் என்ன என்றே தெரியாமல் கல்வியறிவில்லா குருடர்களாய் இருக்கிறார்களே பல கோடி பேர்
வெட்கப்படுகிறேன் இவர்களை கவனிக்க வேண்டாமா ? கல்வி புகட்ட வேண்டாமா?


தோழர்களே சிந்தியுங்கள் ...இவ்வெல்லா அசுத்தங்களையும் கலைந்து நம் நாட்டை பிரகாசிக்க வைப்பது நமது கைகளில் தான் இருக்கிறது .

"நான்","நீ" என்று சிந்திப்பதை விடுத்து "நாம்" என்று சிந்திப்போம் தோழர்களே !

நாம்"காந்திமகானாக" வாழ வேண்டாம் மனிதனாகவாவது வாழ்வோமே !

பொதுவுடமை பற்றி சிந்தியுங்கள் தோழர்களே !

நம் நாட்டை முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்வதை பற்றி சிந்தியுங்கள் தோழர்களே !

இவ்வசுத்தங்கள் எல்லாம் கலைந்து நம் நாடு நாடு ஒளிரும் நாள் வெகு தொலைவில் இல்லை ..
"இப்படை தோற்கின் எப்படை வெல்லும் " என்ற சொல்லை மனதில் கொண்டு
நம் நாட்டை உயர்த்துவோம் நாமும் உயருவோம் ".

இப்படிக்கு,
நான் தமிழன் .



Wednesday, August 12, 2009

!நாளிதழ் ஒன்றில் புகைப்படத்திற்கு கவிதை கேட்டிருந்தார்கள் அதற்கு நான் எழுதி அனுப்பியது..அவர்கள் பிரசூரிக்கிறார்களோ இல்லையோ! நான் பிரசூரித்துவிட்டேன்!


1"தோல் நிறத்தில் வேண்டாம் பேதம்"

என்று எங்களுக்கெடுத்துரைக்க

கருநாய் தோள் மீது

கை போட்டு நடக்கிறாயோ?

என் அருமை வெண்மாருதியே...


Monday, August 3, 2009

!!நான் பித்தம் கொண்ட ஒருத்தீயை பற்றி !!


உன்னோடு நான் பேசிய
சில நிமிடம்
என் வாழ்வின் "பொன்நேரம்" அது
இல்லை !!
அன்பே!!
"பிளாட்டின நேரம்" என்பேன்....

உனை நான் காண்பது ....
பல வருடங்களில் ....
சில நிமிடங்களே....
அத்தருணம் வேண்டி...
அன்பே!!
என் கண்களும் இருக்கின்றன....
பல வருட தவம்.

அன்பே!!
"நீ அழகு"
உன் கன்னக் குழிகள்...
"மிக அழகு"

பகல் வானிலும் ஒரு கார் நிலவோ?
அன்பே!!
உன் கன்னத்து மச்சம்.
அழகு..


இரவின் முழு நிலவோ?
அன்பே!!
இருட்டினில் உன் முகம்...
அழகு...

வார்த்தைகளும் வர மறுக்கிறது ....
என் மூளையிலும் வறட்சியோ??...
அன்பே!!
உன்னைக் காண வில்லை என்பதால்...

அன்பே!!
மீண்டும் அப்பிலாட்டின நேரத்தை
எதிர்பார்த்து....

உன் பித்தன்....