Monday, February 21, 2011

!எந்தன் மூளையின் காதல்!

அடங்கா எண்ணங்கள்..
அலையென திரண்டு..
உயிர் புகுந்தன..
இதயம் தட்டி..
"கேள்..கேள்",என்றன 
என்னுள் நேற்றிரவு..
தூக்கத்தை பொருட்படுத்தாது..
மூளையை தட்டினேன்.

தூக்கம் தெளிந்தவனாய்..
"என்ன", என்றது..
தலையை சொறிந்தபடி சொன்னேன்..
"காதல் கவிதை ஒன்று வேண்டுமென்று."
இந்தா பிடி என்று..
காதினுள் ஓதியது..


"காதல் 
காலுண்டு இவ்வார்த்தைக்கு..
கண்களில்லை..
இவ்விலக்கியத்தில் 
முத்தங்களே இலக்கணங்கள்..
சிலசமயம் வேறுபடும்..
அங்கே ..
இலக்கணங்கள் உடைபடும்..

காதல் 
வயதுகளை மறக்க செய்யும்..
குழந்தை ஆக்கும் .
சிரிக்க வைக்கும்..
கண்களை பேச செய்யும்..
இதய மொழி புரிய வைக்கும்..
அழ வைக்கும்..
காதல்..
தூக்கம் வராமற் செய்யும்..
வந்தாலும்..
அவளை கனவில் 
வர செய்யும்..
முத்தங்கள் தர செய்யும்..
கனவைக் கவிதை ஆக்கும்..
வாழ்வை இனிப்பாக்கும்..

மொத்த இலக்கியங்கள்..
முத்த இலக்கணங்கள்..
கவிதைக் கனவுகள்..
அவளின் முத்தங்கள்..
 யாவும் வேண்டுமெனில்..!
செய்வீர் காதல்!
செய்வீர் காதல்.!"

சொல்லி தூங்கின மூளைகள்..
எழுந்த அலைகள்.
அமைதியாய் அடங்க..
கவிதைக்குள் கவிதை செய்தேன்..
அதை பதிவு செய்தேன்..
காதலுடன்..!

Friday, February 18, 2011

வரம் தந்த அவளுக்கு..!

மனதின் வலிகள்..!
சிகப்பு மையாய்..
வலிந்து ஓட..
காகிதம் எங்கும் 
இரத்தம் ..!
இரத்தம்..!

சொட்டு சொட்டாய் ..
வடித்த கண்ணீர்..
காகிதம் நனைத்து..
இரத்தம் அழித்து..
சித்திரம் வரைந்து ..
வலிகள் போக்கி..
மாயம் செய்தது.
அழுகை..
வலிகள் போக்கும் வரம் !
வலிகள் உண்டோ  ?
அழு..!
கதறி அழு ..!
கோழையோ?
பயம் வேண்டாம் ..
பயமின்றி அழு..
பயபடுபவன் கோழை.!
கண்ணீர் மருந்து..
கொண்ட காயம்..
கரைய வேண்டும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுகை..
உலக மொழி..
குழந்தை மொழி..
யாரும் அறிவார்..
 கேளாமல் 
விடை தரும்..
உதவி வரும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுது முடித்து 
கண்கள் மூடு ..
சொக்கும் தூக்கம் ..
கனவு கூடும் ..
அங்கே காகிதம் தீரும் ..
வலிகள் 
கவிதையாய் பிறக்கும் ..
காயம் ஆறும் ..
இதயம் ஒட்டும்..
சக்தி பிறக்கும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுத...
மறுநாள் எழுந்தேன்..
வந்த யாவும் உண்மை..
உணர்ந்தேன்..
காகிதம் தீர்கிறது..
இடை இடையே 
சொட்டுக் கண்ணீர்கள்..
முற்றுபுள்ளிகளாய்.
தீர்ந்தது கண்ணீர் .
சிரித்தேன்..
வலிகள் இல்லை..
அழுகை  பிடிக்கிறது...
வரம் தந்த அவளுக்கு..
நன்றி.. !
நன்றி..!

Monday, February 14, 2011

!"வெற்றி நமதே" !

தோல்விகள் துரத்தி..
அடித்து 
வெற்றி..வெற்றி..!
என்று கீழே தள்ளி..
முறைத்த..
பயந்து போய்..
அழுது..இறுகபிடித்தேன்..
தலையணையை..
கண்கள் மூடி ஜெயிக்கும் இடம் நோக்கி..
சென்றேன்..!


வெண்மை..! வெண்மை..!
யாவும் வெண்மை..!
என்ன இது?
"உள்ளம்", என்றது குரல்..!
"உள்ளம் ", வெள்ளை ?
விழித்தேன்..!
"இருத்தல் நன்று"
என்றது குரல்..!
குறிப்பெடுத்தேன்.

பக்கத்தில் படிக்கட்டுகள்..!
வானம் நோக்கி..
செல்ல..
ஏறினேன் ஆசையாக..!
வெற்றி..வெற்றி..!
கத்திக் கூப்பாடிட்டேன்..!
வெற்றி நோக்கி சென்றபடி..

"தோல்வி தோல்வி..!",குரல்.
என்ன?
"படிக்கட்டுகள்" என்றது குரல்.!
"ஓஹோ !"
என்று குறிப்பெடுத்தேன்.


போன இடத்தில் ..
மெத்தை ஒன்று கிடக்க..
போய் பாய்ந்தேன்..
குதூகலம்.!!

அங்கே ..!
கண்மை காமமிட்டு..
கருமை கூந்தலில் ..
வெள்ளை மல்லி சூடி..
மணக்க வந்தாள் ஒருத்தி..
அழகில் மயங்கிகிடக்க..
என்னை..
ஓடிவந்து தழுவிக்கொண்டாள்.!!!
தள்ளிவிட மனமில்லை 
தழுவட்டும் என்றிருந்தேன்..!

"யோ அசரீரி .!
யாரிவள்?" வினவினேன்.
"வெற்றி..!
வெற்றி..!",என்றது குரல்.!
சிரித்தபடி..

அள்ளி அணைத்தவள்..
திடீரென..
தள்ளிவிட்டு திரும்பாமல் செல்ல..
திடுக்கென்றது..
துரத்தி ஓடினேன்..!
"நிரந்தரமில்லை",குரல்.
"என்ன? ",நான் !
"வெற்றி ",குரல்.
குறிப்பெடுத்தேன் .கண்ணீர் துடைத்தபடி..
சிரித்தபடி.!
துரத்தி ஓடினேன்..
ஆயிரம் படிக்கட்டுகள்..தாண்டி..
அவளை மீண்டும் அனைக்க.

கண் விழித்தேன் !
எங்கும் "தோல்விகள்...!"
இல்லை "படிக்கட்டுகள்..!"
கட்டி அனைப்பேன் "அவளை" ஒருநாள்..!
இல்லை "வெற்றியை"..!
"வெற்றி எனதே" 
இல்லை 
"வெற்றி நமதே"