Wednesday, January 6, 2010

!அந்நாள் திரும்புமோ? !

"ஹயோ ! சூப்பர் காத்து..!",
இது நீ சொல்ல நான் கேட்ட முதல் வார்த்தை.
நான் குரல் வந்த திசை திரும்ப ..
அங்கே வெள்ளையில் சிகப்பு பூ போட்ட சுடிதாரில்..
ஒரு "தேவதை","நீ" ..நின்றாய்.
எனக்குள்ளே "சிம்போனி இசை" கேட்க
சைடில்..பல்பும் கூட எரிந்தது..
"இது காதல் தான் ",என்று என்னுள் கூறிக்கொண்டு ..
நீ ரசித்த அம்மாலை நேரத் தென்றலுக்கு நன்றி கூறிய
அந்நாள் திரும்புமோ ?


"ஐயோ ! பாத்து பாத்து "
"அதே குரல்", என்று என்னுள் அலாரம் அடிக்க..
குரல் வந்த திசை நோக்கினேன் ..
"அதே முகம்" ஆனால் பச்சை நிற சுடிதாரில் இன்று..
என்னை நோக்கி கை நீட்டியபடி நின்றாய் ..
"இது காதலே தான்", என்று என்னுள் கூறிக்கொண்டு..
"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா ?",என்று கேட்ட வண்டிக்காரனுக்கு
சிரித்தபடி கை காட்டி,உன்னோடு நான் பேச துவங்கிய
அந்நாள் திரும்புமோ?

பல நாள் தவங்கட்கு பின் ..
ஒரு நாள் உன் மொபைல் எண்ணை..
ஒரு தாளில் எழுதி என் கையில் திணித்து
திரும்பிப்பார்க்காமல் சென்றாய்..
சந்தோஷத்தில் வரம் தந்த உனக்கு அர்ச்சனை செய்து..
எங்கள் தெரு ரெட்டை பிள்ளையாருக்கு விடலை போட்டு..
நன்றி கூறிய
அந்நாள் திரும்புமோ?

பல போராட்டங்கள் பின் தள்ளி..
உன் கைகளை நான் எட்டி பிடித்து..
நாம் வாழ்வில் ஒருவராய் இணைந்த அன்று..
"என்னுடன் உள்ள வடுக்கள்..."
உன்னை அடைய நான் கடந்த போராட்டங்களின் எச்சங்களாக..
இருப்பதை ..உன்னிடம் காட்டியபோது..
உன் முத்துக்கண்ணீரை மருந்தாக நீ இட்டாய்..
வடுக்கள் மறையும் என்ற நம்பிக்கையில்..
அந்நாள் திரும்புமோ ?


ஒரு நாள் கோயிலுக்கு நாம் போய்
திரும்பிய போது..
தெருக்கடையில் 5 ரூபாய்க்கு நீ மல்லிப்பூ வாங்கி சூடினாய்..
அதைக்கண்டு நான்
"ஒரு மலரே
மலர் சூடுகிறதே
ஆச்சரியக் குறி.!"
என்று ஒரு மொக்கை கவிதை சொல்ல..
அதற்கும் நீ என் தோளில் சாய்ந்து சிரித்தாய்..
அந்நாள் திரும்புமோ ?


மொட்டை மாடியில் படுத்து..நாம்
வானில் சிதறிக்கிடக்கும் விண்மீனை எண்ணிக் கிடக்க,,
"நான் வந்துட்டேன் " என்று நம் செல்வம் வந்து மேல் பாய..
இருவரும் சேர்த்து அனைத்துக் கொண்டோம் ..
அந்நாள் திரும்புமோ ?


திடீரென ஒரு நாள் நீ அழுதாய்..
ஏன் என்று நான் கேட்க..
நீ பதில் சொல்லவில்லை..
நீ அழும் காட்சி கண்டு என் கண்ணில் நீர் கசிந்தது..

கண்ணீரில் குளித்த தலையணை
என்னை எழுப்ப..
"சே..கனவா !", என்று கசிந்த கண்ணீர் துடைத்தேன்..
என்னவள் ஏன் அழுதாள் என்பதற்கு விடை காண..
அடுத்த கனவிற்கு காத்திருக்கிறேன் ..

-நான் தமிழன்

Sunday, January 3, 2010

!டிசம்பர் 31 , என் கவிதை,அவதார் ,வேட்டைக்காரன் , , பிரணவ் மிஸ்ட்ரி !



வணக்கம் !
தமிழிஷிலும் ..தமிழ்மணத்திலும் எனது பதிவுகளை இணைத்திருக்கிறேன்..சனவரி 1 அன்று பதிவின் மூலம் வாழ்த்துச்சொல்ல முடியவில்லை.இப்போது சொல்றேன் "எல்லார்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்".
டிவில ஸ்பெசல் ப்ரோக்ராம் மாதிரி எதாவது புதுசா பதிவு செய்யனும்னுதான் ஆசை..ஆனா என்ன பண்றது முடியவில்லைமன்னிக்கவும் ..(எசுச் மீ ஹி ஹி ..)
"டிசம்பர் 31 பார்ட்டி ஒன்றிற்கு நம்ம கூட்டாளி பசங்க கூட்டிட்டு போனாங்க...ஒரு மேடை அதை சுத்தி 5000௦௦௦(என்னுநியானுலாம் கேக்கப்புடாது !) பேரு குதி குதின்னு குதிச்சிற்றுந்தாங்க .நாங்களும் போய் கொஞ்ச நேரம் குதிச்சிட்டு, கை கால ஆட்டிட்டு (டான்சுமா ...!)...இருந்தோம்.அப்போது ஒரு வெளிநாட்டவன் ஒரு பெண்ணுடன் வந்து அருகில் நின்று ஆடினான்..அப்பெண் என் அருகே வந்து ஆட நான் தெறித்து ஓடினேன்..என் நண்பன் "அட சே..! போடா டேய் _______வாழ்க்கையை என்ஜாய் பன்னதெரியாதவன்" என்று என்னை திட்டிவிட்டு அவளோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தான் ..நான் மரத்தைத் துணையாகக் கொண்டு சோகத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் ..அப்போ தேர்ரரா ஒரு தத்துவம் தோனுச்சு "டேய் மச்சான்களா நாம ஆயுசுல 1 வருஷம் குறையுதுடா..சோ எதுக்கு இந்த நியு இயர் கொண்டாட்டம் ..ஹிஹிஹி..!"..(ஓவரா இருக்குல்ல..ரூம் போட்டு யோசிப்போம்ல ..!) பார்டி முடியும் வரை ..சோகத்தோடு மரத்ல சாஞ்சுற்றுந்த என்னை அலேக்காய் தூக்கி வண்டில போட்டு வீட்டுக்கு தூக்கி வந்தார்கள் பிரென்ஸ்.. வீட்டுக்கு வந்தவுடன்"ஹேங் ஓவர்" ஆனவர்களை சாமாதானப் படுத்தி படுக்கவைத்துவிட்டு .. நான் ரெண்டு நாள் ஈமெயில் பார்க்கவில்லையே என்று ஜிமெயில் ஓபன் செய்தேன் ..வாழ்த்துச்செய்திகள் வந்து குவிய பெரிய ஆள் இல்லையே..! விரலால் என்னும் அளவுக்கு வாழ்த்துக்கள் வந்திருந்தன.. அதில் ஒரு வித்தியாசமான வாழ்த்து என்னை கன்னத்தில் ஓங்கி அடித்தது போன்றிருந்தது ..பார்ட்டிக்கு சென்றது தவறோ என்று தோன்றியது.. அவ்வாழ்த்தை இணைத்திருக்கிறேன்..

!"அந்த வாழ்த்துச் செய்தி" !

வருஷத்துல முத நாளே கவிதை எழுதுனா டெர்ரரரா..!இருக்குமே அப்டின்னு அன்றைக்கு ஒரு டேர்றோர் கவிதையும் எழுதினேன் ..!(ஆரம்பிசுடான்யா..!நீங்க சொல்றது கேக்குது..கேக்குது..)..
என் கடிகார முட்கள் மூன்றும்
பந்தயக் குதிரை என பறக்கிறது..
உன் வார்த்தை நான் கேட்டால்..

அதுவே கழுதை என நடக்கிறது..
உன் வார்த்தை நான் கேட்க
காத்திருந்தால்..
முட்களும் கூட ஆண் பால் தானோ ?
பெண்ணே, போடுகிறது இருவேடம் ..
உன்னாலே ..!

கவிதை எங்க? அப்டின்னு கேட்டு என்ன இன்சல்ட் பண்ணப்புடாது...பிறகு நா அழுது புடுவேன் அழுது..
( இப்பதான பாஸ் எழுத ஆரம்பிச்ருக்கேன் ..அட்ஜஸ்ட் பண்ணுங்க..)
நியு இயர் அன்னிக்கு கட்டாயம் படம் பாக்கணுமே ..தெய்வ குத்தம் ஆகிறக்குடாதிள்ள...? சோ ரெண்டு படம் பாத்தேன்
எதிர்பாத்து பார்த்த படம் ஒன்னு.
.தெரியாத்தனமா பாத்த படம் ஒன்னு ..

முதல எதிர்பார்த்து பார்த்த படம்..பத்தி சொல்றேன்
"அவதார் "
"அவதார் = பிரம்மாண்டம் " இப்படி கூட சொல்லலாம் . செம படம் .."நாவி"என்ற அந்த அற்புத கற்பனை உலகம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது..
நடேரி அடிக்கடி என் கனவுல வர்றா (நாங்கலாம் யாரு சிங்கமுல..! பயப்புடமாட்டோம்..) மரங்கள்,காடுகள் நம்ம அழிசுற்றுக்க்ற இந்த நேரத்துல இயற்கைய கருவா வச்சு காதல..கவிதையா ப்ளன்ட் பண்ணினதுக்கு ..ஜேம்ஸ் கமரூன் அவர்களுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்.(
"ஐ சி யு"( "i see you " ) இந்த வருஷத்தின் மனசுல நிக்கக்கூடிய வசனமா இருக்கலாம்.படத்தை பற்றி விமர்சனம் என்னைவிட நல்லா பண்றவங்க இருக்காங்க..சோ நா அதா பண்ணல.(பண்ணத்தெரியாதுங்றதுக்கு எப்டிலாம் மேட்ச் பண்ண வேண்டிருக்கு ஹையோ..ஹயோ..!)

இப்ப நான் தெரியாத்தனமா பார்த்த படம் பத்தி சொல்றேன்..
வேட்டைக்காரன் .. சும்மா சூப்பர் காமெடிங்க படம் புல்லா ..காட்சிகள்ல காமெடி பண்ணது போதாதென்று பாட்லையும் வேற குடுமி போட்டு டெர்ரர் காமெடி பண்றார் நம்ம தளபதி ..சாரி நம்ம" இளைய தளபதி ".
பைட் பத்தி கட்டாயம் சொல்லியே ஆகணும்..நம்ம விஜய் கால கீழே வைக்றதே... கிடையாது சும்மா பறந்து..பறந்து அடி பின்றாரு ..(எப்டிதான் யோசிக்ராய்ங்களோ ? !) சன் டிவியால படத்த ஒட்டிருவாங்கனு நினைக்கேன்.
ஐயோ !சொல்ல .மறந்துட்டேன்..அனுஷ்கா ..அப்பப்ப படத்ல வந்து போறாங்க..வில்லங்க அப்பப்ப வந்து சைடுல காமெடி பண்றாங்க ..மொத்தத்ல படம் என்னோட 2 மணி நேரம் 40௦ நிமிஷத்த வேஸ்ட் பண்ணாலும் ..சிறந்த காமெடி பட விருதை தட்டி செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை ...

கொஞ்சம் சிரியஸ் பக்கத்துக்கு வருவோம்..
பிரணவ் மிஸ்ட்ரி பத்தி நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்லாம்..தெரியாதவங்களுக்காக ..அவர் பற்றி ..அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்திய மாணவர் பிரணவ் ,டிஜிட்டல் உலகிற்கும் நம் நடைமறை உலகிற்கும் ஒரு இணைப்பை எற்படுத்துவதைபற்றி(சிக்ஸ்த் சென்ஸ் டெக்னாலஜி ,ஆறாம் அறிவு தொழில்நுட்பம் ) ஆராய்ச்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் பிரணவ், இவரின் கூற்று படி..இவர் தாயாரிதிருக்கும் உபகரணங்கள் கொண்டு நம் வெறும் கையைக்கொண்டு நாம் நினைத்தவற்றை படம் பிடிக்கலாம்..புத்தகத்தை நகல் எடுக்கலாம் ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பிரனவின் ஒரு அருமையான பேச்சு மற்றும் பிரனவின் கண்டுபிடிப்பு பற்றிய வீடியோ இணைப்பை இணைத்திருக்கிறேன் ..

சரி புரியுது..புரியுது..கிளம்பிடறேன்..
அடுத்த சந்திப்பு வரை ,
நான் தமிழன்