Friday, December 31, 2010

! கல்லறைக்கு பூ வைத்தேன்.. !

காதல் காமம் ..
கலவை கலந்து ...
கற்று 
கிடந்து சிரிக்க..
கலை ரசித்து..
கன்னம் உரச..
கண் மூடி தழுவி..
கட்டி அணைக்க 
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

விரல்கள் சொடுக்கெடுத்து...
வருடி தழுவ..
சொல்வதை செய்து..
சொல்லாததையும் செய்து..
தொடாமல் தொட்டு..
தேட ஆசை பற்ற..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

கண்களால் 
கடத்தி..
இதயத்தில் சிறை கொண்டு..
நூறு முத்தம் தர..
ஆசை ஆயிரம் 
உள்ளத்தில் வந்து குவிய..
அள்ளியெடுக்க யாருமின்றி..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

தேடி அலைந்து..
திக்கற்று நின்று..
மூளை கலங்கி..
தெளிவு பெற்று ..
உண்மை விளங்க..
புத்தாண்டு உனக்கு 
புத்துயிர் தர வேண்டி..
கண்ணீரைக் காணிக்கை செய்தேன் ..
உந்தன் 
கல்லறைக்கு பூ வைத்தேன்..

Sunday, December 19, 2010

காதல்..காதல்

காதல்
காதல்..!
கண்ணீர் தீர்ந்தது  அழுது..
இரவின் நீளம் நீண்டு..
தூங்காது விழித்து..
கண்கள் வீங்கி..
சிவந்து..
கண்ணீரில் காதலைக் கரைக்க...
முயல...
தரையில் விழுந்த  துளிகளில்
சிரித்தாள் அவள்..!
சேர்த்த சுகம் முழுதும்
புகைவிட்டு போக்க
முனைந்து..
இரவில் வானம் பார்க்க..
நிலவில் சிரித்தாள்..!
கை விட்டு தானே
தாவிக் குதித்தது சிகரட் ..
கண்ணீர் முட்டி நின்றேன்
அவள் சிரிப்பைக் கண்டு..

பின்னிரவுக் கனவில்..
சேர்த்த  நினைவுகள்...
வந்து குவிய...
கனவெலாம் வந்தாள்..

வந்தவள்  முத்தம்..
நெற்றியில் தர..
கன்னத்தில் வேண்டுமென்றேன்..
சிரிப்பால் மழுப்பி..
முகம் சிவக்க நின்றாள்..
நெற்றிக்குங்குமமும் சேர்ந்து சிவந்திருந்தது ..
"தினமும் வருக"
என்று கோரிக்கை வைக்க..
"கன்னத்தில் முத்தமிட்டாள்"..
என் முகம் சிவந்தது..
காதல் பொங்கி ..
திகட்டி  நிற்க..
கண்கள் சிமிட்டினாள்...
விழித்தேன்..
திகட்டிய காதல் தேடினேன்..
வெறுமை
மிச்சம்..
கண்களில் கண்ணீர் சொரிய...
காதல்..
காதல்..!

Saturday, December 11, 2010

! என் ஆசை !

கண்கள் கைகளால் பேசி 
கோபப்பட்டு...
செல்லமாய் திட்டி ...
கன்னம் கிள்ளி..
உரசி..
தலை கோதி..
பின்னிருந்து அனைத்து..
கழுத்தில் முத்தமிட்டு..
காதல் பேசி..
கொஞ்சி..
காபி தந்து ..
முத்தமிட்டு..ஊக்குவித்து..
தோள் சாய்ந்து..இளைப்பாறி..
இன்பம் தந்து..
சேர்ந்து.. சிரித்து..
கதை பேசி..
கற்று...
சேர்ந்து கவி எழுதி ..
தாள்கள் கசக்கி 
குப்பை தொட்டி நிரப்பி ..
தலையணை சண்டையிட்டு ..
கட்டியணைத்து...
சமாதானம் செய்து..
வெற்றி பெற்று 
இதயம் திருடி...
வாழ்க்கை ரசிக்க..
ஆசை..
கனவில் நீ இருந்தும்...
 நிஜத்தில்
தேடுகிறேன்..
"உன்னை.." 
யாரென்று தெரியாமல்...
காணா 
கனாக் 
காதலியே ...
"உன்னை.."!

Wednesday, December 1, 2010

!நாய்கள்..நாய்கள்..!

!நாய்கள்.. நாய்கள்..!
எங்கள் பெண்கள் 
பினமானாலும் 
விடாது துரத்தி 
தேடும்..!
பிணம் தின்னி நாய்கள்..!
நாய்கள்.. நாய்கள்..!

கண்கள் கைகள் 
கட்டி..
கத்தியால் குத்தி..
கீறி எட்டி உதைத்து..!
பின்னிருந்து..சுட்டு..!
வீரம் காட்டி..
வெறி தீர்க்கும் நாய்கள்..!
நாய்கள் நாய்கள்..!

சிதறிய மண்டைகள்..
எலும்புகள்..நொறுங்கிக் கிடக்க..!
ரத்தக் குளத்தில்..!நின்று..
குரைத்து கொண்டாடும்..நாய்கள்..!
நாய்கள்..! நாய்கள்..!

ரத்தங்கள் ஆறாய் ஓட..
வெற்றியென குரைத்து 
 கீதம் 
பாடும் நாய்கள்..!
நாய்கள்..நாய்கள்..!

செத்து விழுந்தவரை 
இழுத்துப் போட்டு  புதைத்து..
புதைத்து..!
ரத்தங்கள் ஊற்றி 
ஊற்றி..!
சாத்தான்கள் ஓலமிட்டு..
அமைதியாய் இருக்கும்..!
நாய்கள்..
நாய்கள்..!

Tuesday, November 16, 2010

!அவன் கதை!

மூட்டி தேய்ந்து !
தட்டி விழுந்து !
தூக்கம் தொலைத்து..!
கனவில் வெற்றி பெற்று ..!
நிஜத்தில் தோல்வியுற்று..
கதறி அழுது..!
கண்ணீரில் மூழ்கி மிதந்தான்..!


எட்டியவன் ஏளனம் துளைக்க ..!
மனதெலாம்..!
ரத்தம்..!
ரத்தம்..!
காய்ந்த ரத்தம் பெயர்ந்து தொங்க ..!
அடி..!
அடி..!
தோல்வி துளைத்தெடுக்க.. 
நாளை இன்றி வாழ்கை ..!

வீங்கிய கண்களில் தெரிந்தாள்..அவள்..!
ஒளி பெற்றான்..!
உள்ளிருந்து ஒருவன் குரல்
"தேவதை வருவாள் ஒரு நாள்..மயிலிறகோடு..!
மருந்திடுவாள்..!"

மீண்டும் வருவான்..!
முட்டி தேய..
தட்டி விழ..
வெற்றி பெற..!
ஏளனம் தகர்க்க!



கண்விழித்தேன் ..!
எதிரே பீனிக்ஸ்..!

Monday, September 13, 2010

தப்பு.. தப்பு.

தப்பு..
தப்பு..
பெண் ஆண் உரசி நடந்து..
படகருகில்..வந்து நின்று ..
அவள் மடியில் அவன் படுத்து ...
துப்பட்டா மூடி கிடக்க...
காதல்..
காதல்..
காதல்..
தப்பு..
தப்பு..
தலையிலடித்தேன் நான்..


தப்பு..
தப்பு..
மப்பும் மந்தாரமுமாக..
பப்பில்  பெண்கள்..
ஆண்கள்..வித்தியாசமின்றி..
நெளிந்து ஆட..
கட்டி அனைத்து..
தடவிக் கொடுத்துக்
காதல்..
காதல்..
காதல்..
ஒரு நாள்
ஓரிரவு காதல்..
தப்பு..
தப்பு..
தலையிலடித்தேன் நான்..!


தப்பு..
தப்பு..
தளும்ப ஆடை..
குலுங்கி சிரிக்கும் பெண்கள்..
அவன் கையில்  பொம்மையாய்
அவர்கள்..
பூங்கா பூத்திருந்தது..
தப்பு..
தப்பு..
தலையிலடித்தேன் நான்..
கலாசாரம்..கொள்கை பற்றி..
பாடம் எடுத்தேன்..
எனக்கே நான் !


நேற்றிரவு கனவில் வந்தாள்..
ஒருவள்..
தூக்கத்தில்
என்னை தூக்கி அனைத்து..
மடியில் கிடத்தினாள்..!
காதருகில் வந்து
மெதுவாக சொன்னாள்..
"!பொறாமை..உனக்கு..!"
உமிழ்ந்த வார்த்தை..
அமிலமென சுட்டெரிக்க
உண்மை விளங்கியது..
"எனக்கொரு கேர்ள்
பிரெண்ட் வேணுமடா..! "
வானொலி பாட..
என்னுள்ளே பட்டாம்பூச்சி..!

Friday, September 3, 2010

!முத்தம்.. முத்தம்... முத்தம்..!

முத்தம் முத்தம் ...
அவன் தந்த முதல் முத்தம்..
அவள் கண்ணில் முத்தாய்க் கண்ணீர்...
உப்புக்கரிக்க முத்தம்..
முத்தம்..முத்தம்..
கொஞ்சல் முத்தம்..
கெஞ்சல் முத்தம்..
கொஞ்சும் முத்தம்..
கொஞ்சுண்டு முத்தம்..
இலக்கண முத்தம்..
இலக்கணமே இன்றி முத்தம்..
தவிக்கும் முத்தம்
திகட்டும் முத்தம்
திகட்டா முத்தம்..
காதலன் முத்தம்..
கணவன் முத்தம்..
மாலை நேரத்து மயக்கத்து..
மயக்கும் முத்தம்..
கண்பொத்தி முத்தம்..
களைப்பாற முத்தம்..
களைப்பின்றி தொடர் முத்தம்...
சூரியன் கடலுக்கு..
அலைகள் கரைக்கு..
காற்று தருவது..
முத்தம்..
முத்தம்...
முத்தம்..!
யாவும் முத்தம்..
முத்தம்...
முத்தம்..!

Thursday, August 26, 2010

! நான் தேடும் கனவு !

வாழ்க்கை வரலாறு ...

காதல் வேதியியல்..

நீ இயற்பியல்...என்பேன் ..

நாம் சேர்ந்தால்

அது உயிரியல் ஆகிடும்..

"எந்திரன்" தந்த அறிவியல் பித்து தணிக்க ...

என் அறிவு பித்துக் கொண்ட அறிவியற்கவிதை..



கண் கொண்டு

காற்றலையில் கதைத்து

கவர்ந்திழுப்பாய்..

எதிர் துருவம் என்னை..!

உன் கண்களும் காந்தங்களே..!



வளையும் உன் வளையில்..

அலையில் தொலையும் கரையாய்..

தொலையும் என் இதயம்..

காமம் என் காதலை புசிக்கும்..

சுதாரிப்பேன்..!

அவ்வப்போது என் இதயத்தில் நிலநடுக்கம்..

சுனாமியாய்..ஆர்மோன்களின் வெள்ளப்பெருக்கம்..

கொண்டு வருவாய்..

ஆசையில் எனை அடித்துச் செல்வாய் !


உடற்கூறு சாத்திரம் படித்த எனக்கு

உள்ளக்கூறு சாத்திரம் படிப்பித்தாய்..

நீ கண்ணிமைக்கும்

ஒவ்வொரு தருணமும்

என்னுள்ளே ஹிரோஷிமா..!

தெரியுமா?

இரவின் இருள் நீக்க

மின்னலே!

அவ்வப்போது நீ வருவாய்..

என் இரவை இனிப்பாக்க..

என் கனாவில் ..வருவாய் நீ..

என் கானா தேவதையே..

நீயும்

மின்னலே..!



ஐன்ஸ்டீனின் கனவில் நீ வரவில்லை..!

இல்லையேல் அவரும் சென்றிருப்பார் கவி எழுத...

அனுவைப் பிளந்திருக்கமாட்டர்..

ஹிரோஷிமா தப்பித்திருக்கும்..



என் மூளை நியுரான்களுக்கு

வேலை அதிகம்..தந்தாய்

தூக்கம் கெடுத்தாய்..!

கிறுக்கவைத்தாய்..!

அழவைத்தாய்..!

சிரிக்கவைத்தாய்..!

கனவில் வாழும் உனை..

நினைவில் கொண்டு..

நிஜத்தில் தேடுகிறேன்

கனவே உனை..!

தேவதையே உனை..!

Friday, August 13, 2010

!சுதந்திரம், சர்வாதிகாரம் ,ஜனநாயகம், சமுதாய மாற்றம் , தனிமனித ஒழுக்கம் ,ஒரு ரூபாய் அரிசி!

வணக்கம் நண்பர்களே !
நான் கட்டுரை எழுதி பல மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன் காலத்திற்கும் கூட பிடிக்கவில்லை போலும் நான் எழுதுவது .
'உனக்கு எழுதுவதற்கு சரியான "தூண்டல்" தருகிறேன் அதுவரை காத்திரு' ,என்றது காலம் . என் கட்டுரையாளனும் 'விடியும் வரை காத்திருக்கிறேன்' என்று என்னுளே உறங்கிக் கொண்டிருந்தான். நேற்று  கால பகவான் கண் திறந்தார்...அத்தூண்டலைத் தந்தார் .அவருக்கு நன்றிகள் கூறி கட்டுரையை ஆரம்பிக்கிறேன் ..!


நேற்று சொந்த காரணத்திற்காக சேலம் வரை செல்ல வேண்டி இருந்தது ..இருக்கைகள் நிரம்பி வழிந்த பேருந்தில் இன்னும் ஆட்களை அடைக்க வண்டியை திண்டுக்கல்லில் நிறுத்தியிருந்தார் ஓட்டுனர் ..அப்போது தோலை மட்டும் ஆடையாய்க் கொண்டு ஒரு சிறுவன் வந்து என் அருகில் நின்றான்.. அவனது எலும்புகளை நான் எண்ணத் தொடங்கியிருந்தேன்.. "அண்ணா ! பசிக்குது எதாவது கொடுங்களேன்"!என்றான்..பையைத் துளாவினேன்.. 'தம்பி சில்லறை இல்லைப்பா', என்று சொன்னேன் ..! 'அண்ணா வயிறு ரொம்ப பசிக்குதுணா'.. என்று காலில் விழ தொடங்கினான் ..அவன் கண்களில்  பசியை நான் வாசித்தேன்.. பையிலிருந்து 10 ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்..! 'ரொம்ப நன்றி அண்ணே' ! என்று சொல்லி மறுபடி என் காலில் விழுந்தான்.. அவன் முகம் முழுவதும் சிரிப்பு..என் கண்களில்  கண்ணீர் ..!
படிக்கலையாப்பா? என்றேன் ..'இல்லை' என்று தலை அசைத்தான்.. ஏன் என்று என் அடுத்த கேள்வியைக் கேட்பதற்குள்
ஓட்டுனர் வண்டியை எடுக்க..வெடுக்கென கீழே இறங்கினான்..வெளியே நின்று எனக்கு சிரித்தபடி கை அசைத்தான்..நானும் கை அசைத்துவிட்டு...திரும்பினேன்..

பேருந்து வேகம் எடுக்கத் தொடங்கியது..கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினேன்..
ஒரு நடுத்தர வயது மனிதர் தன உடலில் சாட்டையை  சுழற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருந்தார்..கருத்திருந்த அவர் உடலில் உதிரம் சொட்டு சொட்டாய்  வடிய சிவந்துபோய் இருந்தார் அந்த கருப்பு மனிதர்..! பக்கத்தில் இடுப்பில் குழந்தையோடு நின்று குடும்பமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர் ...

பிச்சை எடுப்பதே நம் தேசியத்தொழிலோ என்று எண்ணத் தோன்றியது..படித்துக் கொண்டிருந்த ஜெப்ரி ஆர்செர் நாவலை கீழே வைத்துவிட்டு சிந்திக்கத் தொடங்கினேன்..!

நாம் சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன..ஆனால் இன்றும் மக்கள் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட  வழி இல்லாமல்  இருக்கத்தான் செய்கிறார்கள்..!
மற்றொருபுறம் தென் இந்தியாவின் மிகப்பெரிய மால் (mall)  பல திரைப்பட அரங்குகளுடன் கட்டப் படுகிறதாம்.. சென்னையில் !
ஏன் இந்த நிலை ஏற்ற தாழ்வு ..?
நல்ல அரசியல் தலைவர்கள் இல்லை..அரசியல் மாற்றம் தேவை...........இன்னும் நீள்கிறது பட்டியல்..
அவைகளுடன் சிலவற்றை  இணைக்க நான் நினைக்கிறேன்.."தனி மனித ஒழுக்கம்,கட்டாய கல்வி, சட்டத்தை மீறுவோருக்கு கடும் தண்டனை.."
அரசுகளையும் அமைச்சர்களையும்,அதிகாரிகளையும் குறை கூறும் நாம் நம் தவறுகளை மறைக்கிறோம் இல்லை மறந்து விடுகிறோம்..

நமக்கு தேவை அரசியல் மாற்றம் மட்டுமன்று ..சமுதாய மாற்றமும் கூட.. என் நண்பன் ஒருவன் கேரளத்துகாரன் .அங்கே தமிழர்களை அவர்கள் "பிச்சைக்காரர்களாகவும்","திருடர்களாகவும்" பார்க்கிறார்கள் என்றான்.
அவனை அடிக்கலாம் என்று கூட கை ஓங்கிவிட்டேன் ..பின்னொரு சமயம் நான் கேரளாவிற்கு சென்றபோது அங்கே நான் கண்கூட பார்த்தது அவன் பொய் சொல்லவில்லை என்று புரியவைத்தது..இன்றும்  கிராமங்கள் இருக்கின்றன திருடுவதையே தொழிலாக கொண்டு ! இவர்கள் இவ்வாறு இருப்பது நம் கல்வி முறைக்கு ஒரு கேள்விக்குறிதான்..அறியாமையே இவர்கள் இவ்வாறு இருக்க காரணம்..! . குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருப்பது சட்ட விரோதம் என்ற நிலையை கொண்டு வந்தாலே இதுபோன்ற இழிநிலையை மாற்றலாம் என்று நினைக்கிறேன்..சர்வாதிகாரம் போல் பலருக்கு தெரியலாம்  ..அவர்களுகெல்லாம் ஒன்று "நோய் குணமாக சில கசப்பு மருந்துகளை ஏற்றுதான் ஆகவேண்டும்.."

எங்கள் ஊர் நகராட்சியில் முதன்முதலாக கட்டணக் கழிப்பறை தொடங்கினார்கள் ஒருவரும் உபோயோகபடுத்தவில்லை..காசை குறைத்தும்  பார்த்தார்கள்..மக்கள் தங்கள் நிலையிலிருந்து நகரமறுத்தார்கள்..இலவச கழிப்பறையாக கூட ஆக்கிபார்த்தார்கள்..! மக்கள் திறந்தவெளி புல்வெளியையே பயன் படுத்துகிறார்கள்..இவர்களை என்ன சொல்ல?
இது ஒரு சிறு உதாரணம் தான்.. நம் தனிமனித ஒழுக்கம் இவ்வாறு இருக்க நாம் மற்றவர்களை(அதிகாரிகள், அரசியல்வாதிகள் ) பற்றி பேசுவது ஏற்புடையது என்று நான் நினைக்க வில்லை ..
மக்களுக்காக அரசு எவ்வளவோ சட்டங்கள்..திட்டங்கள் அறிவித்தாலும்..அதை மக்களுக்கு எடுத்து செல்ல போதிய ஆட்கள் இல்லை..தொண்டு நிறுவனங்களும் கூட சுயநலத்தோடு செயல்படுகின்றன..
நம் போன்ற இளைஞர்களுக்கு தங்கள் குல தெய்வங்களான நம்மூர் நடிகர்களுக்கு பாலபிசேகம் செய்வதிலும் ..தியேட்டர் வாசலில் பணத்தையும் ,காலத்தையும் தொலைப்போமே தவிர பொதுநலம்..தொண்டு, சமுதாய முன்னேற்றம் , என்று சிந்திப்போமா ??
இந்நிலை மாறவும்   தனி மனித ஒழுக்கத்திற்காகவும்  சட்டத்தை மீறுவோருக்கெதிராகவும்  கடும் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் ..சட்டங்கள் தொடர்ந்து அமலிலும் இருக்க வேண்டும் ..!

இத்தனை கால சுதந்திரத்திற்கு பின்னும்..ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கித்தான்..ஒரு வேலை சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றிருக்கிறது  மக்கள் நிலை..இது மிகவும்  சிந்திக்க  வேண்டிய  விஷயம் 
63 வருட ஜனநாயகத்தின் நிலை இவ்வாறு இருக்க..அதன் மேல் எனது நம்பிக்கை..சிறிது குறைகிறது..ஜனநாயகத்திற்கு..புதிய ஒரு அர்த்தத்தை நாம் கொண்டு வரவேண்டும....ஜனநாயகம் கம்யுனிசம்,சர்வாதிகாரம்  என்று எல்லா சித்தாந்தங்களினிருந்தும் நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு புதிய ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் .அப்படி ஒன்று உருவானால் ..கல்வி வியாபாரமாக இருக்காது ,தவறு செய்வோர் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர், விவசாயம் பெருகும் , சமுதாய மாற்றம் ஏற்படும் ..
அம்மாற்றம் ஏற்படுவது நம் கையில் தான் இருக்கிறது இளைஞர்களே ! ..
"மாற்றம் ஒன்றே மாறாதது"  என்பதை நினைவில் கொண்டு நம் சமுதாயம் மாற்றப்படவேண்டும் என்று நினைத்து அதற்காக நாம் செயல் படவேண்டும் நம் சமுதாயத்தை மாற்ற வேண்டும் ..! நாம் பார்க்காவிட்டாலும் நம் பிள்ளைகளாவது நாம் காணும் கனவு தேசத்தில் வாழ்வதற்கு இப்போதே செயல் படுவோம்..
                                                வெற்றி நமதே !
                                                         நன்றி !

(படித்து போர் என்று சொல்பவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்..! ஏதோ கொஞ்சம் புரிகிறது என்று சொல்பவர்கள் இரண்டு பேர் இருந்தால் கூட  அதுவே என் வெற்றி ! )

Sunday, July 11, 2010

!அம்மூவரும் நான் பெற்ற தண்டனையும் !

பச்சைப் பட்டுடுத்தி எழுந்து நின்று 
அருவியாய்க்கொட்டி கீதம் பொழிந்தாள் ..
மலையவள் ..
அவளது அழகில் மயங்கி நான்.. 
சிற்றின்பத்தில் லயித்திருக்க...

தவழ்ந்து வந்து என்னை வருடிவிட்டு ..
பேரின்பத்திற்கே..! என்னை பதவியேற்றம் செய்தாள்..
தென்றல் அவள்..

சில்லென்ற சாரலாம் மூன்றாமவள் ..
வந்து என்னை மது உண்ட தேனியாய் ..
மாற்றிவிட்டாள்..
என்னை சொக்கவைத்தாள்...
மாயவலையில் சிக்கவைத்தாள்...

"பேராசை பிசாசு..!" என்னை பிடித்து வைக்க..
அடுத்தவள் வரவிற்காய் 
காத்து நின்றேன் ..
கண் பூத்து நின்றேன்....
பேரிடியாய் என் இதயத்தில் விழுந்தது...
சுரீரென்று.. சுட்ட வெயில்!..
அம்மூவரின் "தகப்பன்" என்று மனதில் சிரித்து 
அசையாமல் நின்றேன்..

அழைப்பு மணி.. அடித்து..! என்னை எழுப்ப ..
சே! என்று எழுந்தேன்..
 சூரியன் வெளியே சுட்டெரித்துக் கொண்டிருந்தார்..!
"கனவிற்காக நிஜத்திலும் தண்டனையா?",
என்று சிரித்தபடி..
புறப்பட்டேன்..
தண்டனையை பெறுவதற்கு..!

Sunday, July 4, 2010

!காதலித்துப் பார் ..!

காதலித்துப் பார் ..!
இருளை ரசிக்கச் செய்யும்..
அமாவாசையும் அழகாய் தெரியும்..
வருடங்கள் நிமிடமாகும் ..
நிமிடங்கள் வருடமாகும்..
காதலித்துப் பார்..
புதிது புதிதாய் பொய் சொல்ல வேண்டுமா?
தனிமையில் சிரிக்க வேண்டுமா?
கவிகள் பல புனைய வேண்டுமா?
காதலித்துப் பார்..
நண்பர்கள் தெய்வமாய் தெரிவர்..
காதலியின் அப்பாக் கூட வில்லனாய்க் காட்சி தருவார்..
காதல் புரட்சி செய்யும்..
இருவது வருட உறவையும் இரு நிமிடங்களில் ..
உடைக்கச் செய்யும் ..
காதலித்துப் பார்..

காதல் 
ஈருயிரை இணையச் செய்யும்..
ஈருடல் ஓருயிரான விந்தையை உணரச் செய்யும்..

கல்லூரியில் காதல்  ஒரு விஷ பரிட்சை 
அது தேவதைகளுக்கு வேலைவாய்ப்பும் ..
தேவதாஸ்களுக்கு அரியர்ஸ் பேப்பரையும் 
பரிசாய்த் தரும்..

காதல் 
ஆர்மோன்களின் திருவிளையாடல் ..
காதல் 
இன்ப வெள்ளத்தை பெருக்கெடுக்கச் செய்யும்..
கூடாக் காதல் ..
கண்களிலும் கூட வெள்ளப்  பெருக்கெடுக்கச் செய்யும் ..
காதல் 
ஒரு புரியா புதிர்..
விடை காண வேண்டுமா ?
நீயும் கவி பாட வேண்டுமா?
காதலித்துப் பார்..!

Saturday, April 24, 2010

!அது ஒரு மழைக்காலம்.!

அது ஒரு மழைக்காலம்..
என் தோட்டத்து ரோஜாவின் இதழ்களில்..
முத்தமிட்டு கொண்டிருந்தன மழைத்துளிகள்..
சில்லிட்டு பூத்திருந்தால் என் தோட்டத்து ஒற்றை ரோஜா..

வெளியே கொட்டும் மழை..
அப்பொழுது ஒரு வெள்ளை ரோஜா..
நடக்கும் சக்தி கொண்ட அற்புத ரோஜா..
நான் பார்த்ததிலேயே அழகிய ரோஜா..

இறைவனிடம் அழகு கொடை பெற்று..
குடை கொண்டு நடந்து வந்தாள்...
அவள் என்ற அந்த பெயர்தெரியா ரோஜா..
தன்னை முத்தமிட வந்த மழைத்துளிகளைக்..
குடை கொண்டு தடுத்தபடி நடந்தாள் ..
சோ!! என்று அழுதபடி குடையிலிருந்து தெறித்துத்
தற்கொலை செய்தன.மழைத்துழிகள்
தோல்வியைத் தாங்காது
அவளைத் தொட்டவை சில அங்கேயே..
மோட்சம் பெற்றன..பாவம்!
என் கண்ணிலிருந்து..மறையும் வரை..
பார்த்தேன் ..அவளை கண்ணிமைக்காது..
என் அரும்பு மீசையை தடவியபடி..

பெயர் தெரியா அரோஜாவின்..நினைவில் ..
இருந்து எழவில்லை பல மணி நேரத்திற்கு

மழை வெறித்தது..
பிரியா விடை பெற்றன என் தோட்டத்து
ரோஜாவின் மழைத்துழிகள்..
அன்று என் தோட்டத்தில் புதிதாய் ஒரு மொட்டு..
பூத்திருந்தது..
என் இதயத்திலும் கூட..புதிதாய் ஒன்று...

பசுமையாய் என் நினைவில் இன்றும் உண்டு..
அந்த பத்து நிமிட முதல் காதல்..
இன்று வரை நான் மீண்டும் காணாத அந்த வெள்ளை ரோஜா..
அது ஒரு அழகிய மழைக்காலம்..


Saturday, April 10, 2010

!அவ்வேழு மணி நேரக் கனா.!

கண்களாலே கவி பாடி ..
எனைத் தாண்டி நீ சென்றாய்..
அன்று முதல் தேடுகிறேன்...
என் இதயத்தைத் தொலைத்துவிட்டு..


அன்பே !
களவாடிய என் இதயம் வேண்டாம்..
காதலோடு உன் இதயம் வேண்டும்...
தருவாயோ..?

உனைக் கண்ட நாள் முதலே
கனாக் காங்கிறேனடி தோழி..
நம் எதிர்காலம் பற்றி..
அவ்வேழு மணி நேரக் கனாக் காண..
பதிநேழுமணி நேர தவம் யுகங்களாய்..
கழிவதேனோ?

ஏழு மணி நேரம் கனா..
கனா முழுதும்..
நீ..
கவிதை..
நம் காதல்..
ஊடல்..
திகட்டா..முத்தம்..
குழந்தையின் சங்கீதம்..
நேற்றைய கனாக் கவி வரி
இன்னும் என் நினைவில் உண்டு..
"மண் தின்னும் நாள் வரையிலும்
சேர்ந்திருப்பேன் உன்னோடு இதே காதலோடு.."
பகல் கனவு அல்லவே...ஆதல் .
கனா மெய்ப்பட வேண்டும் தோழி..
நிஜத்திலே..
மண் தின்னும் வரையில் சேர்ந்திருக்க
அனுமதிப்பாயோ?..
உன் மடியில் நான் உயிர் விட..
வரம் தருவாயோ?
என் காதலை
ஏற்பாயோ?..
ஏற்பாயோ?

கூவியது அலாரம்..
கண் விழித்தேன்..
சே!
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
நிஜத்திலே காணாக் காதலை..பற்றி..
கனா..
கனாவிலே கவிதை..
கவிதையிலே கனா..
சிரிப்பு வந்தது..
எனக்கு

Friday, March 26, 2010

பைத்தியத்தின் கடிதம்

ன்பே ..!
சையில் உன்னை அணைத்தது ..
தழில் இதழ் புதைத்தது ..
ரக்கூந்தலில் நீ முகத்தி அறைந்தது..
ன் சிரிப்பில் எனைத் தொலைத்தது...
தி நான் அணைத்த விளக்கு கண்டு..வெட்கத்தை அள்ளி நீ பூசியது..

ட்டா உயரத்தையும் எட்டிபிடிக்க நீ உதவியது .
எல்லாம் என் மனதில் உண்டு என்னுயிரே அழியாது இன்றுவரை..

ற்றிவிட்ட..ஏணியே எங்கே நீ?
ரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டாய் மீளாத்துயில்கொள்ள..
யாது வேண்டுகிறேன்
வையை போல் ஐயன் முருகனிடம் ..
நீ மீண்டும் வர வேண்டும் என்று..
மக்களிடம் பைத்திய பட்டம் பெற்று ..

இப்படிக்கு,
பைத்தியம் (மக்களை பொறுத்தவரை) எனப்படும் உன் காதலன்

Thursday, March 4, 2010

!அவனை வீழ்த்த வந்தவள் கதை !

அந்தி மயங்க மயங்க...
ஆர்ப்பரிக்கிரதவனுள்ளம்..அலைகடலாய் ..
அவள் வரவை எண்ணி.. எண்ணி....
அவனுக்கு அம்மா அவள் பின்னிக் கொடுத்த..
சால்வையைப் போர்த்தியபடி..
வானம் கரு நிற போர்வை அணிவதை ..
பார்த்தபடி காத்திருக்கிறான்..
அவள் வரவு வேண்டி ஆவலோடு..

வருபவள் தனியாக வராது மங்கை ஒருவளையும் கூட்டி வருவாள் ..
அவனுக்காக ..அனுதினமும்..
நடக்கிறது இக்கூத்து தொலைகாட்சி தொடர்கதையாய்...நில்லாமல்..

ஐயோ ..!
வந்துவிட்டாள் அவள் ..
அவனைக் கட்டிலில் வீழ்த்த..
.............
"என்ன இவன் மஞ்சள் கவிஞனா?"
நீங்கள் கேட்பது என் செவியில் விழுகிறது..

அவனைக் கட்டிலில் வீழ்த்த வந்தவள் பெயர் "தூக்கம் "
அவள் கூட்டி வந்த மங்கை அவளது பெயர் "கனவு"

Wednesday, January 6, 2010

!அந்நாள் திரும்புமோ? !

"ஹயோ ! சூப்பர் காத்து..!",
இது நீ சொல்ல நான் கேட்ட முதல் வார்த்தை.
நான் குரல் வந்த திசை திரும்ப ..
அங்கே வெள்ளையில் சிகப்பு பூ போட்ட சுடிதாரில்..
ஒரு "தேவதை","நீ" ..நின்றாய்.
எனக்குள்ளே "சிம்போனி இசை" கேட்க
சைடில்..பல்பும் கூட எரிந்தது..
"இது காதல் தான் ",என்று என்னுள் கூறிக்கொண்டு ..
நீ ரசித்த அம்மாலை நேரத் தென்றலுக்கு நன்றி கூறிய
அந்நாள் திரும்புமோ ?


"ஐயோ ! பாத்து பாத்து "
"அதே குரல்", என்று என்னுள் அலாரம் அடிக்க..
குரல் வந்த திசை நோக்கினேன் ..
"அதே முகம்" ஆனால் பச்சை நிற சுடிதாரில் இன்று..
என்னை நோக்கி கை நீட்டியபடி நின்றாய் ..
"இது காதலே தான்", என்று என்னுள் கூறிக்கொண்டு..
"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா ?",என்று கேட்ட வண்டிக்காரனுக்கு
சிரித்தபடி கை காட்டி,உன்னோடு நான் பேச துவங்கிய
அந்நாள் திரும்புமோ?

பல நாள் தவங்கட்கு பின் ..
ஒரு நாள் உன் மொபைல் எண்ணை..
ஒரு தாளில் எழுதி என் கையில் திணித்து
திரும்பிப்பார்க்காமல் சென்றாய்..
சந்தோஷத்தில் வரம் தந்த உனக்கு அர்ச்சனை செய்து..
எங்கள் தெரு ரெட்டை பிள்ளையாருக்கு விடலை போட்டு..
நன்றி கூறிய
அந்நாள் திரும்புமோ?

பல போராட்டங்கள் பின் தள்ளி..
உன் கைகளை நான் எட்டி பிடித்து..
நாம் வாழ்வில் ஒருவராய் இணைந்த அன்று..
"என்னுடன் உள்ள வடுக்கள்..."
உன்னை அடைய நான் கடந்த போராட்டங்களின் எச்சங்களாக..
இருப்பதை ..உன்னிடம் காட்டியபோது..
உன் முத்துக்கண்ணீரை மருந்தாக நீ இட்டாய்..
வடுக்கள் மறையும் என்ற நம்பிக்கையில்..
அந்நாள் திரும்புமோ ?


ஒரு நாள் கோயிலுக்கு நாம் போய்
திரும்பிய போது..
தெருக்கடையில் 5 ரூபாய்க்கு நீ மல்லிப்பூ வாங்கி சூடினாய்..
அதைக்கண்டு நான்
"ஒரு மலரே
மலர் சூடுகிறதே
ஆச்சரியக் குறி.!"
என்று ஒரு மொக்கை கவிதை சொல்ல..
அதற்கும் நீ என் தோளில் சாய்ந்து சிரித்தாய்..
அந்நாள் திரும்புமோ ?


மொட்டை மாடியில் படுத்து..நாம்
வானில் சிதறிக்கிடக்கும் விண்மீனை எண்ணிக் கிடக்க,,
"நான் வந்துட்டேன் " என்று நம் செல்வம் வந்து மேல் பாய..
இருவரும் சேர்த்து அனைத்துக் கொண்டோம் ..
அந்நாள் திரும்புமோ ?


திடீரென ஒரு நாள் நீ அழுதாய்..
ஏன் என்று நான் கேட்க..
நீ பதில் சொல்லவில்லை..
நீ அழும் காட்சி கண்டு என் கண்ணில் நீர் கசிந்தது..

கண்ணீரில் குளித்த தலையணை
என்னை எழுப்ப..
"சே..கனவா !", என்று கசிந்த கண்ணீர் துடைத்தேன்..
என்னவள் ஏன் அழுதாள் என்பதற்கு விடை காண..
அடுத்த கனவிற்கு காத்திருக்கிறேன் ..

-நான் தமிழன்

Sunday, January 3, 2010

!டிசம்பர் 31 , என் கவிதை,அவதார் ,வேட்டைக்காரன் , , பிரணவ் மிஸ்ட்ரி !



வணக்கம் !
தமிழிஷிலும் ..தமிழ்மணத்திலும் எனது பதிவுகளை இணைத்திருக்கிறேன்..சனவரி 1 அன்று பதிவின் மூலம் வாழ்த்துச்சொல்ல முடியவில்லை.இப்போது சொல்றேன் "எல்லார்க்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்".
டிவில ஸ்பெசல் ப்ரோக்ராம் மாதிரி எதாவது புதுசா பதிவு செய்யனும்னுதான் ஆசை..ஆனா என்ன பண்றது முடியவில்லைமன்னிக்கவும் ..(எசுச் மீ ஹி ஹி ..)
"டிசம்பர் 31 பார்ட்டி ஒன்றிற்கு நம்ம கூட்டாளி பசங்க கூட்டிட்டு போனாங்க...ஒரு மேடை அதை சுத்தி 5000௦௦௦(என்னுநியானுலாம் கேக்கப்புடாது !) பேரு குதி குதின்னு குதிச்சிற்றுந்தாங்க .நாங்களும் போய் கொஞ்ச நேரம் குதிச்சிட்டு, கை கால ஆட்டிட்டு (டான்சுமா ...!)...இருந்தோம்.அப்போது ஒரு வெளிநாட்டவன் ஒரு பெண்ணுடன் வந்து அருகில் நின்று ஆடினான்..அப்பெண் என் அருகே வந்து ஆட நான் தெறித்து ஓடினேன்..என் நண்பன் "அட சே..! போடா டேய் _______வாழ்க்கையை என்ஜாய் பன்னதெரியாதவன்" என்று என்னை திட்டிவிட்டு அவளோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தான் ..நான் மரத்தைத் துணையாகக் கொண்டு சோகத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் ..அப்போ தேர்ரரா ஒரு தத்துவம் தோனுச்சு "டேய் மச்சான்களா நாம ஆயுசுல 1 வருஷம் குறையுதுடா..சோ எதுக்கு இந்த நியு இயர் கொண்டாட்டம் ..ஹிஹிஹி..!"..(ஓவரா இருக்குல்ல..ரூம் போட்டு யோசிப்போம்ல ..!) பார்டி முடியும் வரை ..சோகத்தோடு மரத்ல சாஞ்சுற்றுந்த என்னை அலேக்காய் தூக்கி வண்டில போட்டு வீட்டுக்கு தூக்கி வந்தார்கள் பிரென்ஸ்.. வீட்டுக்கு வந்தவுடன்"ஹேங் ஓவர்" ஆனவர்களை சாமாதானப் படுத்தி படுக்கவைத்துவிட்டு .. நான் ரெண்டு நாள் ஈமெயில் பார்க்கவில்லையே என்று ஜிமெயில் ஓபன் செய்தேன் ..வாழ்த்துச்செய்திகள் வந்து குவிய பெரிய ஆள் இல்லையே..! விரலால் என்னும் அளவுக்கு வாழ்த்துக்கள் வந்திருந்தன.. அதில் ஒரு வித்தியாசமான வாழ்த்து என்னை கன்னத்தில் ஓங்கி அடித்தது போன்றிருந்தது ..பார்ட்டிக்கு சென்றது தவறோ என்று தோன்றியது.. அவ்வாழ்த்தை இணைத்திருக்கிறேன்..

!"அந்த வாழ்த்துச் செய்தி" !

வருஷத்துல முத நாளே கவிதை எழுதுனா டெர்ரரரா..!இருக்குமே அப்டின்னு அன்றைக்கு ஒரு டேர்றோர் கவிதையும் எழுதினேன் ..!(ஆரம்பிசுடான்யா..!நீங்க சொல்றது கேக்குது..கேக்குது..)..
என் கடிகார முட்கள் மூன்றும்
பந்தயக் குதிரை என பறக்கிறது..
உன் வார்த்தை நான் கேட்டால்..

அதுவே கழுதை என நடக்கிறது..
உன் வார்த்தை நான் கேட்க
காத்திருந்தால்..
முட்களும் கூட ஆண் பால் தானோ ?
பெண்ணே, போடுகிறது இருவேடம் ..
உன்னாலே ..!

கவிதை எங்க? அப்டின்னு கேட்டு என்ன இன்சல்ட் பண்ணப்புடாது...பிறகு நா அழுது புடுவேன் அழுது..
( இப்பதான பாஸ் எழுத ஆரம்பிச்ருக்கேன் ..அட்ஜஸ்ட் பண்ணுங்க..)
நியு இயர் அன்னிக்கு கட்டாயம் படம் பாக்கணுமே ..தெய்வ குத்தம் ஆகிறக்குடாதிள்ள...? சோ ரெண்டு படம் பாத்தேன்
எதிர்பாத்து பார்த்த படம் ஒன்னு.
.தெரியாத்தனமா பாத்த படம் ஒன்னு ..

முதல எதிர்பார்த்து பார்த்த படம்..பத்தி சொல்றேன்
"அவதார் "
"அவதார் = பிரம்மாண்டம் " இப்படி கூட சொல்லலாம் . செம படம் .."நாவி"என்ற அந்த அற்புத கற்பனை உலகம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிக்குது..
நடேரி அடிக்கடி என் கனவுல வர்றா (நாங்கலாம் யாரு சிங்கமுல..! பயப்புடமாட்டோம்..) மரங்கள்,காடுகள் நம்ம அழிசுற்றுக்க்ற இந்த நேரத்துல இயற்கைய கருவா வச்சு காதல..கவிதையா ப்ளன்ட் பண்ணினதுக்கு ..ஜேம்ஸ் கமரூன் அவர்களுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்.(
"ஐ சி யு"( "i see you " ) இந்த வருஷத்தின் மனசுல நிக்கக்கூடிய வசனமா இருக்கலாம்.படத்தை பற்றி விமர்சனம் என்னைவிட நல்லா பண்றவங்க இருக்காங்க..சோ நா அதா பண்ணல.(பண்ணத்தெரியாதுங்றதுக்கு எப்டிலாம் மேட்ச் பண்ண வேண்டிருக்கு ஹையோ..ஹயோ..!)

இப்ப நான் தெரியாத்தனமா பார்த்த படம் பத்தி சொல்றேன்..
வேட்டைக்காரன் .. சும்மா சூப்பர் காமெடிங்க படம் புல்லா ..காட்சிகள்ல காமெடி பண்ணது போதாதென்று பாட்லையும் வேற குடுமி போட்டு டெர்ரர் காமெடி பண்றார் நம்ம தளபதி ..சாரி நம்ம" இளைய தளபதி ".
பைட் பத்தி கட்டாயம் சொல்லியே ஆகணும்..நம்ம விஜய் கால கீழே வைக்றதே... கிடையாது சும்மா பறந்து..பறந்து அடி பின்றாரு ..(எப்டிதான் யோசிக்ராய்ங்களோ ? !) சன் டிவியால படத்த ஒட்டிருவாங்கனு நினைக்கேன்.
ஐயோ !சொல்ல .மறந்துட்டேன்..அனுஷ்கா ..அப்பப்ப படத்ல வந்து போறாங்க..வில்லங்க அப்பப்ப வந்து சைடுல காமெடி பண்றாங்க ..மொத்தத்ல படம் என்னோட 2 மணி நேரம் 40௦ நிமிஷத்த வேஸ்ட் பண்ணாலும் ..சிறந்த காமெடி பட விருதை தட்டி செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை ...

கொஞ்சம் சிரியஸ் பக்கத்துக்கு வருவோம்..
பிரணவ் மிஸ்ட்ரி பத்தி நிறைய பேருக்கு தெரிஞ்சுருக்லாம்..தெரியாதவங்களுக்காக ..அவர் பற்றி ..அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்திய மாணவர் பிரணவ் ,டிஜிட்டல் உலகிற்கும் நம் நடைமறை உலகிற்கும் ஒரு இணைப்பை எற்படுத்துவதைபற்றி(சிக்ஸ்த் சென்ஸ் டெக்னாலஜி ,ஆறாம் அறிவு தொழில்நுட்பம் ) ஆராய்ச்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் பிரணவ், இவரின் கூற்று படி..இவர் தாயாரிதிருக்கும் உபகரணங்கள் கொண்டு நம் வெறும் கையைக்கொண்டு நாம் நினைத்தவற்றை படம் பிடிக்கலாம்..புத்தகத்தை நகல் எடுக்கலாம் ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பிரனவின் ஒரு அருமையான பேச்சு மற்றும் பிரனவின் கண்டுபிடிப்பு பற்றிய வீடியோ இணைப்பை இணைத்திருக்கிறேன் ..

சரி புரியுது..புரியுது..கிளம்பிடறேன்..
அடுத்த சந்திப்பு வரை ,
நான் தமிழன்