Monday, April 18, 2011

!"என்னடா இது ? இது கவிதையா?" !

நீண்ட இரவில்..
தூக்கமின்றி புரண்டு படுத்தேன் 
கண்கள் மூடி 
தூக்கத்தை அழைத்தேன் 
அணைக்க..
புதுபெண்ணாக  வரமறுத்தாள்
புரண்டேன்..
சே ! என்று கண் விழித்தேன்
அவளைக் கடிந்தவாறு ..


எதிரே 
மலைமுகட்டை முத்தமிட்டுக் கொண்டே ..
எழுந்தான் சூரியன் 
பொறாமை தீ என்னுள் பற்றியது ..
திரும்ப கண்மூடி கெஞ்சினேன் ..
வரமறுத்தாள்..
எழுந்துவிட்டேன் கோபம் கொண்டு .



ஜன்னலருகே போய் நின்று 
அவர்களின் காதலை 
ரசித்தேன் ..சிரித்தேன் ..
திடீரென என கைகள் பேனா 
தேடி காகிதம் கிழித்து 
எழுதியது..
எதைப்பற்றியோ?
நான் எழுதுவதாகக் கூட 
இருக்கலாம்..

"போட்டி போடாதே 
போட்டியிட்டாலே ..
தோல்வி பயம் 
வெற்றி யாது ?
உன் வெற்றி அவன் தோல்வி ..
அவன் வெற்றி உன் தோல்வி ..
யாவரும் வெற்றி பெற 
போட்டி கூடாது..
புறந்தள்ள வேண்டும்.. 
கொலைசெய்ய வேண்டும்..
தப்பாக சொல்லிவிட்டேனோ?
தவறான கருத்தோ ??
போட்டி போடு ..
வெற்றி பெறு..உன் இஷ்டம்
 என்னடா இது ??
இது கவிதையா??"


எழுதிவிட்டு கை உதறினேன் ..
சூரியனின் முத்தத்திற்காக 
ஏங்கி காத்திருக்கிறாள் மலைமுகடு ..
மாலைவரை தானே   இருக்கட்டும் ..
என்னடா இது ?
இது கவிதையா ?
மறுபடி அவளே என்னை அழைத்தாள்..
சூரியனைப் பார்த்து 
ஏளனச் சிரிப்பு சிரித்து ..
அவளை அணைத்தேன் 
கண்கள் மூடினேன் 
"தூக்கம்" என்னை ஆட்கொண்டுவிட்டாள்..

"என்னடா இது ?
இது கவிதையா?"
என்னை நான் கேட்டது ..

No comments:

Post a Comment