Thursday, December 17, 2009

!!என்னைக் கவர்ந்த கவிப்பேரரசின் கவிதை..உங்களையும் கவரும்..!!

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே...
90 நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்...
800 ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி...

பார்வையிலே சில நிமிடம்...
பயத்தோடு சில நிமிடம்...
கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்...
இலக்கணமே பாராமல்...
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த...
மோகத்தில் சில நிமிடம்...

எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை ...
அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை...
யார் தொடங்க யார் முடிக்க ஒரு வழியும் தோன்றவில்லை...
இருவருமே தொடங்கி விட்டோம் இதுவரைக்கும் கேள்வி இல்லை...

அச்சம் களைந்தேன்
ஆசையினை நீ அணைத்தாய் ...

ஆடை களைந்தேன்
வெட்கத்தை நீ அணிந்தாய்...

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும் ...
கடைசியிலே அழுத கண்ணீர் மட்டும் கையில் இன்னும் ஒட்டுதடி ....

5 comments:

  1. நண்பனே,
    ஒவ்வொரு மணித் துளியும் ஓராயிரம் கவிதைகள் சொல்லத் துடிக்கின்றனவே.மிக அருமை. என்றும் அன்புடன் நந்தினி.

    ReplyDelete
  2. கவிபேரசின் கவிதைகள் அனைத்தும் மனதை தொடுபவை ....அதிலும் இந்த கவிதை உள்ளதை தொடுகின்றது :)

    ReplyDelete
  3. "உள்ளம்" .."மனது" இரண்டிற்கும் வித்தியாசம் எனக்கு தெரியல கொஞ்சம் சொல்லி குடுக்க முடியுமா...ப்ரீத்தி தங்கச்சி ..! ஹி ஹி .

    ReplyDelete
  4. தொட்டனைத்த - தொட்டணைத்த
    அனைத்தாய் - அணைத்தாய்
    கலைந்தேன் - களைந்தேன்

    என்னனவே சரியான பொருத்தமான சொற்களெனக் கருதுகிறேன்.
    இந்த கவிதையின் ஆரம்பவரிகள்- இருவர் படத்தில்
    இடம்பெறுகிறது. என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. நன்றி யோகன்! ...தவறுகளை திருத்திவிட்டேன் ... முழு கவிதையும் இருவர் படத்திலே உண்டு ..!

    ReplyDelete