Sunday, December 27, 2009

!முதல் முயற்சியாக சிறிது நகைச்சுவையோடு எழுதி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்..ரசிப்பீர்கள் என்று நினைத்து !

தமிழ் பாடல் என்று தற்சமயம் வரும் பாடல்களில் வரும் வார்த்தைகள் தமிழ் தானா என்று பல சமயம் எனக்கு சந்தேகம் வருவதுண்டு ..சில பாடல்களெல்லாம் ஒரு நாலஞ்சு தடவை கேட்டாதான் அது தமிழ் தாணு தெரியுது..

ஒரு பக்கம் "நாக்க முக்க நாக்க முக்க" என்று எந்த மொழினே தெரியாம கதருறாங்க...இன்னொரு பக்கம் ஆத்திச்சுடி...ஆத்திச்சுடி ...என்று தமிழிலேயே?? வெறி கொண்டு ஆடுறாங்க..இது ரெண்டையும் கேட்டு ..வாண்டுங்க வீட்ல போடற ஆட்டம் ..பெரும் ஆட்டம்...

இதுல என்ன வேடிக்கை என்றால் இது மாதிரி எந்த மொழியும் சாராத ஒரு பாடலை ரசிப்பது பெருமை ,நல்ல கருத்துள்ள பழைய பாடல்களைக் கேட்பதே கேவலம் என்றும் நினைக்கும் நம்ம யூத்ஸ் (நானுந்தாம்பா) நிலை..பரிதாபம்.. நான் புதுமைக்கு எதிரானவன்லாம் கிடையாது பா..ஆனா நம்ம பழைய பாட்டுக்களையும் சிதைக்காம பாதுகாக்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்..

சரி விடுங்க பாஸ் ..அறிவுரை ஸ்டைலில் போகுது ...பிறகு ஜனநாயக நாடு ,ரசிப்பு சுதந்திரம் இல்லை என்று யாரவது கமெண்ட்கொடுக்க போறீங்க ...
சாம்பிளுக்கு இந்த பாவேந்தர் பாடல்கள..கேளுங்க மச்சான்களா!...நான் டைலமோ..டைலமோ...கேக்கபோறேன் ஹி....ஹி...

மீண்டும் அடுத்த சந்திப்பில் இன்னும் பேசுவோம்..

நான் தமிழன்..

3 comments:

  1. நண்பா,
    பாடல்கள் மிக இனிமையாக இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய பாடல்கள். அருமை. தொடரட்டும் உமது தமிழார்வம்
    படிக்கட்டும் நமது தமிழர்கள்
    மகிழட்டும் உமது உள்ளம்,
    மலரட்டும் நமது நட்பு.என்றும் அன்புடன் நந்தினி.

    ReplyDelete
  2. ஆத்திச்சுடி... மட்டுமில்ல, உலக பொதுமறையாம் திருக்குறள கூட சில பதர்கள் ( மன்னிக்கவும் ) அதோட பொருளையே மாத்தி எழுதுறாங்க....

    ReplyDelete