Monday, February 21, 2011

!எந்தன் மூளையின் காதல்!

அடங்கா எண்ணங்கள்..
அலையென திரண்டு..
உயிர் புகுந்தன..
இதயம் தட்டி..
"கேள்..கேள்",என்றன 
என்னுள் நேற்றிரவு..
தூக்கத்தை பொருட்படுத்தாது..
மூளையை தட்டினேன்.

தூக்கம் தெளிந்தவனாய்..
"என்ன", என்றது..
தலையை சொறிந்தபடி சொன்னேன்..
"காதல் கவிதை ஒன்று வேண்டுமென்று."
இந்தா பிடி என்று..
காதினுள் ஓதியது..


"காதல் 
காலுண்டு இவ்வார்த்தைக்கு..
கண்களில்லை..
இவ்விலக்கியத்தில் 
முத்தங்களே இலக்கணங்கள்..
சிலசமயம் வேறுபடும்..
அங்கே ..
இலக்கணங்கள் உடைபடும்..

காதல் 
வயதுகளை மறக்க செய்யும்..
குழந்தை ஆக்கும் .
சிரிக்க வைக்கும்..
கண்களை பேச செய்யும்..
இதய மொழி புரிய வைக்கும்..
அழ வைக்கும்..
காதல்..
தூக்கம் வராமற் செய்யும்..
வந்தாலும்..
அவளை கனவில் 
வர செய்யும்..
முத்தங்கள் தர செய்யும்..
கனவைக் கவிதை ஆக்கும்..
வாழ்வை இனிப்பாக்கும்..

மொத்த இலக்கியங்கள்..
முத்த இலக்கணங்கள்..
கவிதைக் கனவுகள்..
அவளின் முத்தங்கள்..
 யாவும் வேண்டுமெனில்..!
செய்வீர் காதல்!
செய்வீர் காதல்.!"

சொல்லி தூங்கின மூளைகள்..
எழுந்த அலைகள்.
அமைதியாய் அடங்க..
கவிதைக்குள் கவிதை செய்தேன்..
அதை பதிவு செய்தேன்..
காதலுடன்..!

Friday, February 18, 2011

வரம் தந்த அவளுக்கு..!

மனதின் வலிகள்..!
சிகப்பு மையாய்..
வலிந்து ஓட..
காகிதம் எங்கும் 
இரத்தம் ..!
இரத்தம்..!

சொட்டு சொட்டாய் ..
வடித்த கண்ணீர்..
காகிதம் நனைத்து..
இரத்தம் அழித்து..
சித்திரம் வரைந்து ..
வலிகள் போக்கி..
மாயம் செய்தது.
அழுகை..
வலிகள் போக்கும் வரம் !
வலிகள் உண்டோ  ?
அழு..!
கதறி அழு ..!
கோழையோ?
பயம் வேண்டாம் ..
பயமின்றி அழு..
பயபடுபவன் கோழை.!
கண்ணீர் மருந்து..
கொண்ட காயம்..
கரைய வேண்டும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுகை..
உலக மொழி..
குழந்தை மொழி..
யாரும் அறிவார்..
 கேளாமல் 
விடை தரும்..
உதவி வரும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுது முடித்து 
கண்கள் மூடு ..
சொக்கும் தூக்கம் ..
கனவு கூடும் ..
அங்கே காகிதம் தீரும் ..
வலிகள் 
கவிதையாய் பிறக்கும் ..
காயம் ஆறும் ..
இதயம் ஒட்டும்..
சக்தி பிறக்கும்..
ஆதல் 
அழு..!
கதறி அழு..!

அழுத...
மறுநாள் எழுந்தேன்..
வந்த யாவும் உண்மை..
உணர்ந்தேன்..
காகிதம் தீர்கிறது..
இடை இடையே 
சொட்டுக் கண்ணீர்கள்..
முற்றுபுள்ளிகளாய்.
தீர்ந்தது கண்ணீர் .
சிரித்தேன்..
வலிகள் இல்லை..
அழுகை  பிடிக்கிறது...
வரம் தந்த அவளுக்கு..
நன்றி.. !
நன்றி..!

Monday, February 14, 2011

!"வெற்றி நமதே" !

தோல்விகள் துரத்தி..
அடித்து 
வெற்றி..வெற்றி..!
என்று கீழே தள்ளி..
முறைத்த..
பயந்து போய்..
அழுது..இறுகபிடித்தேன்..
தலையணையை..
கண்கள் மூடி ஜெயிக்கும் இடம் நோக்கி..
சென்றேன்..!


வெண்மை..! வெண்மை..!
யாவும் வெண்மை..!
என்ன இது?
"உள்ளம்", என்றது குரல்..!
"உள்ளம் ", வெள்ளை ?
விழித்தேன்..!
"இருத்தல் நன்று"
என்றது குரல்..!
குறிப்பெடுத்தேன்.

பக்கத்தில் படிக்கட்டுகள்..!
வானம் நோக்கி..
செல்ல..
ஏறினேன் ஆசையாக..!
வெற்றி..வெற்றி..!
கத்திக் கூப்பாடிட்டேன்..!
வெற்றி நோக்கி சென்றபடி..

"தோல்வி தோல்வி..!",குரல்.
என்ன?
"படிக்கட்டுகள்" என்றது குரல்.!
"ஓஹோ !"
என்று குறிப்பெடுத்தேன்.


போன இடத்தில் ..
மெத்தை ஒன்று கிடக்க..
போய் பாய்ந்தேன்..
குதூகலம்.!!

அங்கே ..!
கண்மை காமமிட்டு..
கருமை கூந்தலில் ..
வெள்ளை மல்லி சூடி..
மணக்க வந்தாள் ஒருத்தி..
அழகில் மயங்கிகிடக்க..
என்னை..
ஓடிவந்து தழுவிக்கொண்டாள்.!!!
தள்ளிவிட மனமில்லை 
தழுவட்டும் என்றிருந்தேன்..!

"யோ அசரீரி .!
யாரிவள்?" வினவினேன்.
"வெற்றி..!
வெற்றி..!",என்றது குரல்.!
சிரித்தபடி..

அள்ளி அணைத்தவள்..
திடீரென..
தள்ளிவிட்டு திரும்பாமல் செல்ல..
திடுக்கென்றது..
துரத்தி ஓடினேன்..!
"நிரந்தரமில்லை",குரல்.
"என்ன? ",நான் !
"வெற்றி ",குரல்.
குறிப்பெடுத்தேன் .கண்ணீர் துடைத்தபடி..
சிரித்தபடி.!
துரத்தி ஓடினேன்..
ஆயிரம் படிக்கட்டுகள்..தாண்டி..
அவளை மீண்டும் அனைக்க.

கண் விழித்தேன் !
எங்கும் "தோல்விகள்...!"
இல்லை "படிக்கட்டுகள்..!"
கட்டி அனைப்பேன் "அவளை" ஒருநாள்..!
இல்லை "வெற்றியை"..!
"வெற்றி எனதே" 
இல்லை 
"வெற்றி நமதே" 

Saturday, January 29, 2011

! இதயம் கொண்ட இறைவா..!

காதல் மொழி 
அவள் 
கண்கள் பேச ..!
நான் 
கண் மூடி 
கூந்தலலையில் 
மூழ்கிய தருணங்கள்.

நான் 
வைத்த முத்தங்கள் அவள்..
கன்னங்கள் நனைக்க..
அவள் 
விழியால் சுட்டு .
என் 
இதயம் உடைத்து ..
அள்ளிய நிமிடங்கள்.
அவள் 
பேசி சிரித்து ..
அனைத்து தழுவிய 
நேரங்கள்.

அவள்  
கண்மை 
கரைத்து வந்த ..
கருப்பு கண்ணீர்..
கையில் ஒட்டி...
உயிர் புகுந்து ..
வெடித்து ,,
இதயம் கொன்று ..
சென்ற தருணம்..

யாவும் 
கூடி ..
மீண்டு வந்த என்னை ..
மீண்டும் மீண்டும் கொல்கின்றன..
இதயம் இல்லாது ..

இறைவா ..!
சிதறிய இதயம் ஒட்ட..
வலி தீர .
ஒரு வழி வேண்டும் ..
இறைவா..!
இதயம் கொண்ட இறைவா..!

Tuesday, January 25, 2011

!லைட் போட்ட புண்ணியவான்....!

களைத்து வந்து...
 கண்கள் மூடி..
கனவில் விழுந்தேன்..
"காதல்" சுவைக்க.

அவள் பார்வை அம்புகள்..
இதயம் கிள்ள..
பார்த்து சிரித்தேன்..
பதில் சிரிப்பு..
சிரிப்பில் தவறி விழுந்தேன்..
மீண்டு வர..
மீண்டும் சிரிப்பு..
விரும்பி விழுந்தேன்..
திரும்பும் எண்ணமில்லை...

பாடினாள்.."குயில்" என்றேன்..
"கதை" என்றாள்...
"கவிதை" என்றேன்..
சிரித்து கண்ணிமைத்தாள் 
பேச்சற்று ..பார்த்தேன்..
 நின்றேன்..!

புருவங்கள் நடனம் ஆட..
பேசினாள்..
மயங்கினேன்..

திடீர் வெளிச்சம் ..
தூக்கம் கெடுக்க..
விழித்தெழுந்தேன்..
கலைந்தது  கனவு ..
இதயமும் கூட...

லைட் போட்ட புண்ணியவான்...
வாழ்க..!
வாழ்க..!

Friday, December 31, 2010

! கல்லறைக்கு பூ வைத்தேன்.. !

காதல் காமம் ..
கலவை கலந்து ...
கற்று 
கிடந்து சிரிக்க..
கலை ரசித்து..
கன்னம் உரச..
கண் மூடி தழுவி..
கட்டி அணைக்க 
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

விரல்கள் சொடுக்கெடுத்து...
வருடி தழுவ..
சொல்வதை செய்து..
சொல்லாததையும் செய்து..
தொடாமல் தொட்டு..
தேட ஆசை பற்ற..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

கண்களால் 
கடத்தி..
இதயத்தில் சிறை கொண்டு..
நூறு முத்தம் தர..
ஆசை ஆயிரம் 
உள்ளத்தில் வந்து குவிய..
அள்ளியெடுக்க யாருமின்றி..
கண் மூடி 
காற்றில் தேடுகிறேன் ..
உன்னை..

தேடி அலைந்து..
திக்கற்று நின்று..
மூளை கலங்கி..
தெளிவு பெற்று ..
உண்மை விளங்க..
புத்தாண்டு உனக்கு 
புத்துயிர் தர வேண்டி..
கண்ணீரைக் காணிக்கை செய்தேன் ..
உந்தன் 
கல்லறைக்கு பூ வைத்தேன்..

Sunday, December 19, 2010

காதல்..காதல்

காதல்
காதல்..!
கண்ணீர் தீர்ந்தது  அழுது..
இரவின் நீளம் நீண்டு..
தூங்காது விழித்து..
கண்கள் வீங்கி..
சிவந்து..
கண்ணீரில் காதலைக் கரைக்க...
முயல...
தரையில் விழுந்த  துளிகளில்
சிரித்தாள் அவள்..!
சேர்த்த சுகம் முழுதும்
புகைவிட்டு போக்க
முனைந்து..
இரவில் வானம் பார்க்க..
நிலவில் சிரித்தாள்..!
கை விட்டு தானே
தாவிக் குதித்தது சிகரட் ..
கண்ணீர் முட்டி நின்றேன்
அவள் சிரிப்பைக் கண்டு..

பின்னிரவுக் கனவில்..
சேர்த்த  நினைவுகள்...
வந்து குவிய...
கனவெலாம் வந்தாள்..

வந்தவள்  முத்தம்..
நெற்றியில் தர..
கன்னத்தில் வேண்டுமென்றேன்..
சிரிப்பால் மழுப்பி..
முகம் சிவக்க நின்றாள்..
நெற்றிக்குங்குமமும் சேர்ந்து சிவந்திருந்தது ..
"தினமும் வருக"
என்று கோரிக்கை வைக்க..
"கன்னத்தில் முத்தமிட்டாள்"..
என் முகம் சிவந்தது..
காதல் பொங்கி ..
திகட்டி  நிற்க..
கண்கள் சிமிட்டினாள்...
விழித்தேன்..
திகட்டிய காதல் தேடினேன்..
வெறுமை
மிச்சம்..
கண்களில் கண்ணீர் சொரிய...
காதல்..
காதல்..!