Wednesday, September 30, 2009

!!!என்னைக் கவர்ந்த ஒரு ஈழத்துக் கவிதை..."கன்னத்தில் முத்தமிட்டால்" படத்திலிருந்து!!!


எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன...
எங்கள் இமைகள் கவிழ்ந்துள்ளன...
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன...
எங்கள் பற்கள் கண்டிப்போய் உள்ளன...
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்...
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக...
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக...
எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக...
எங்களை நீங்கள் வண்டியில் பூட்டுக...
எங்களை முதுகில் கசையால் அடிக்குக...
எங்கள் முதுகு தொர்பில் துளர்ந்து போகட்டும்..




.......தாழ்ந்த புருவங்கள் ஒரு நாள் நிமிரும்..
கவிழ்ந்த இமைகள் ஒரு நாள் உயரும்...
இறுகிய உதடுகள் ஒரு நாள் துடிதுடிக்கும்...
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்...
அதுவரை நீங்கள் எங்களை ஆளுக...
அது வரை உங்கள் வல்லம் ஓங்குக...

Monday, September 14, 2009

!!என் பள்ளிக்காலத்தில் படிக்க வேண்டுமே என்று கஷ்டப்பட்டு வேண்டா வெறுப்பாய் படித்த செய்யுள் இப்பொழுதுதான் இச்செய்யுளின் சுவையை உணர்கிறேன்!!


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல் அறிவு வேண்டும்
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பணியைப் போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

-மகாகவி சுப்ரமணிய பாரதி

Wednesday, September 9, 2009

!!இதோ இந்த வார கிறுக்கல் உங்களுக்காக!!.............................நிழற்படம்........................


"என்னவள்" நிழற்படம கிட்ட வேண்டி
நெடுநாளாய் தவமிருந்தேன் ....
அவ்வரம் கிடைக்க வேண்டி...
அனுதினமும் காத்திருந்தேன் ...
ஆத்திகனாவும் மாறிவிட்டேன்...


கிட்டிவிட்ட இத்திருநாளே...
என் வாழ்வின் பெருநாளாம் .


கண்டிருந்தால் கட்டியனைத்து...
நன்றி! கூறியிருப்பேன்...
நான் கேட்ட வரம் ஈன்றதினால் (இறைவனை)

ஆனால்......
கண்டதில்லை கண்கள் கொண்டு...
இன்று வரை இறைவனை ...

"என் செய" என எண்ணியவாறு...
படுத்தபடி பார்த்திருந்தேன்
விட்டத்தை வெறித்தவாறு ...
"பளிச் "சென்று மின்னலொன்று
அச்சமயம் என் மதியில் பாய ..
பட்டென்று வெகுண்டெழுந்தேன்...
பட்டாசை பாயிலிருந்து...

அவசரமாய் அருகிலிருந்த
அலமாரி கதவு திறந்து...
மிக அழகாய் "என்னவள்" வீற்றிருக்கும்..
"அவள்" திருவுருவநிழற்படம் எடுத்து .....
நன்றி கூறினேன்...
கட்டியணைத்தேன்...
இன்பம் கண்டேன்...

இறைவனையே கண்டுவிட்டேன்...
என்ற இறுமாப்பில் ...
துயில் கொள்ள சென்று விட்டேன்...

-- அவள் பித்தன் (நான் தமிழன் )

Tuesday, September 8, 2009

!!முள்வேலிக்குள் முடங்கிப் போய் இருக்கும் நம் தமிழ் உறவுகளுக்காக என் மதியில் தோன்றியது !!


கையருந்து..... காலருந்து....

காலைக் கடனையும்..

ஒரு வேளை உணவையும்...

ஓரிடத்தில் முடித்துவிட்டு ...

ஒட்டிய கன்னத்தோடு ...

ஓடி வரும் கண்ணீர் துடைத்து...

கேட்பாரின்றி அநாதையாய்...

கொடுங்கோலன் ஆட்சியிலே ....

கொடுமை பல அனுபவிக்கும் ....

நம் தமிழ் மக்களின் நிலை கண்டு...

சுய நினைவோடு"சிந்தியுங்கள் "...

என்னருமை தமிழர்களே !...

முள் வெளிக்குள்....

மூனரை லட்சம் உயிர்கள்...

அவ்வுயிர்கள்...

வயிர் நிறைய "இல்லை" உணவு

கொடுத்தனுப்பிய உணவுகளையும்

கொட்டிகொடுத்த பொருட்களையும்

கெட்டுப்போக விட்டுவிட்டு

"!சாகட்டும் தமிழினம் பிணியினிலே!",

என்று கனைக்கிறது...

கழுத்தைக் கூட்டம் தீவினிலே !

இக்கொடுமைகள் களைய

"ஜாதி", "மதம்" மறந்து...

"இனம்", "மொழி" ஒன்றே....

என்பதை நினைவு கூர்ந்து...

முள்வேலிக்குள் முடங்கி இருக்கும்

நம் தமிழ் மக்களினை வெளிக்கொணர ...

முயற்சி செய்வோம் !

நம் உரிமைகளை மீட்டெடுப்போம் !

வாருங்கள்.. தமிழர்களே...!

வாருங்கள்....!

இப்படிக்கு ,

நான் தமிழன் .

Wednesday, August 26, 2009

!!மானமுள்ள தமிழன் ஒவ்வொருவரையும் பொங்கி எழ செய்யும் இக்காட்சி ..

குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.

http://www.channel4.com/news/articles/world/asia_pacific/is+this+evidence+of+sri+lankan+aposwar+crimesapos/3321087

இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.



கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே.








!!இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.??!!






தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.






ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.



எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.
தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.

Tuesday, August 25, 2009

நான் படித்து,பார்த்து,கேட்டு ரசித்த ஒரு சினிமா பாடல் !!படம்: முதலாளி

ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு
நீயேஅன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!


தென்னை மரச் சோலையிலே
சிட்டு போலே போற பெண்ணே! (2)
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே (2)
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!

- கவி கா.மு.ஷெரீப்

Friday, August 21, 2009

!!!இதோ இந்த வார கிறுக்கல்!!!


நான் தொலைநோக்கன் !
நீ தொலைநோக்கியாய் இருப்பாய்
என்பதை ஞான் அறிவேன்...
நம் எதிர்காலத்தை தொலைநோக்க
இந்நிகழ்காலத்தில் முயல்வோமே!
என்னுயிர் தொலைநோக்கியே !!

அழகாய் வீடு
அருகே தோட்டம்
மிக அருகே மிக அழகாய் நீ !!
அந்நகர நரக வாழ்க்கை !
உன்னால் நகர சொர்க்கமாகுமே !!

ஒவ்வொரு வெள்ளியும் "நிலாச்சோறு "
உண்டு ," மறவாதே! " , வெண்மதியே !
முதல் வெள்ளியன்று உன்
செவியில் மிக மெலிதாய் சொல்வேன்
கவிப்பேரரசின் கவிதை வரிக் கவர்ந்து

"!உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே! "
அந்நிசியில் உன் வெட்கம் காண
வேண்டுமே கண்கள் கோடி !

"திகட்டுகிறது" என்றெண்ணம்
என் மதியில் "உதிக்கிறது "!
தற்சமயம் இத்தொலைநோக்கு ...
மிக அதிகம்
என நினைப்போர் நிலை அறிந்து
இத்தோடு முடிக்கிறேன்
மிச்சத்தை நேரிலே சேர்ந்தே
நோக்குவோம் ...
என்னுயிர் தொலைநோக்கியே!!
இப்படிக்கு,
தொலைநோக்கன் (நான் தமிழன்).